2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

AIA வர்த்தக நாமத் தூதுவராக ஹாரி கேன்

S.Sekar   / 2023 ஜனவரி 23 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

AIA குழும லிமிட்டட் தனது வர்த்தக நாமத் தூதுவராக டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் அணியின் கால்பந்து வீரரும், இங்கிலாந்து அணியின் தலைவருமான ஹாரி கேனை நியமித்திருப்பதாக அறிவித்திருந்தது. டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் அணியுடன் AIA ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மை ஊடாக ஹாரியுடன் 10 வருட கூட்டிணைவினை இந்த வர்த்தக நாமத் தூதுவர் பதவி கட்டியெழுப்புகின்றது.

AIA மற்றும் ஹாரி இரு தரப்பும் உள ஆரோக்கியம் மற்றும் கடினமான நிலையிலிருந்து மீண்டு வருதல் போன்றவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதில் தங்களது விருப்பங்களைப் பகிர்ந்திருந்தனர். இக்கூட்டாண்மையின் ஊடாக உடல், உள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தில் வெற்றி பெறுவதற்கு ஹாரி கேன் அறக்கட்டளையுடன் (HKF) AIA கூட்டிணைவினை ஏற்படுத்தும். இப்பிரச்சார நடவடிக்கையானது நேர்மறையான சிந்தனை, தன்னம்பிக்கை மற்றும் பிறரின் ஆதரவினைப் பெறுதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக ஹாரி கேன்: மீண்டு வருதல் தலைப்பில் ஹாரியின் சுயமாகத் தயாரிக்கப்பட்ட இயங்குபடத்துடன் ஆரம்பமாகும்.

AIA குழுமத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி ஸ்டுவாட் ஏ ஸ்பென்ஷர் கருத்துத் தெரிவிக்கையில், “AIA இன் வர்தக நாமத் தூதுவராக ஹாரி கேனை வரவேற்பதிலும் மற்றும் டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் உடனான கூட்டாண்மையினை உறுதிப்படுத்தியிருப்பதிலும் நாங்கள் மிகவும் உற்சாகமாகவே இருக்கின்றோம். 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் மக்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும், மற்றும் மிகச்சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு ஆசியா முழுவதும் ஒரு மாற்றமுள்ள அபிவிருத்தியினைத் துரிதப்படுத்துவதற்கு AIA மிகவும் உறுதி பூண்டிருக்கின்றது. ஹாரியின் அதிகளவான பின்தொடர்பவர்கள் மற்றும் இவரின் செல்வாக்கு போன்றன பிராந்தியம் முழுவதும் மக்களை ஊக்குவிக்கவும் மற்றும் அவர்களுக்கு கல்வி அறிவினை வழங்குவதற்கும் உதவக்கூடியதாகவே இருக்கும்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

“AIA இன் வர்த்தக நாமத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைப் பராமரிப்பதன் பெறுமதியினை நான் அதிகம் நம்புவதோடு; மக்கள் தங்களது உள ஆரோக்கியத்தினைச் சிறப்பாக பேணிப் பராமரிப்பதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் எனது நிலையினை நான் பயன்படுத்த வேண்டியிருப்பது முக்கியமானதொன்றாகவே அமையுமெனவும் நான் உணர்கின்றேன். AIA உடன் மிகவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்பதிலும், ஆசியா முழுவதும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நிறுவனத்தினுடைய முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதிலும் நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன்” என ஹாரி கேன் கருத்துத் தெரிவித்திருந்தார். 

AIA டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் கால்பந்துக் கழகத்தின் பிரதான உலகளாவிய பங்காளராக 2013 ஆம் ஆண்டிலிருந்தே கூட்டாண்மையினை ஏற்படுத்தியிருக்கின்றது. இக்கூட்டாண்மையானது பிராந்தியம் முழுவதிலுமுள்ள மக்களுக்கு AIA உடன் இணைந்து ஆழமான மற்றும் உறுதியான ஈடுபாட்டினை வழங்குவதற்கான மிகவும் சக்திவாயந்த ஊடகமாகச் செயற்படுகின்றது. மேலும் இதனது மிகவும் பிரபலமான கால்பந்து பயிற்சி மையங்கள் மூலம் 80,0000 சிறுவர்கள் பயனடைந்திருக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .