2025 மே 21, புதன்கிழமை

CBL க்கு Great Place to Work- சான்றிதழ்

Editorial   / 2018 மே 15 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

CBL (சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட்), 2018 ஆம் ஆண்டில் மிக முக்கிய விருதான Great Place to Work சான்றிதழைப் பெற்றுள்ளது. பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் கருணாரத்ன மற்றும் குழும மனிதவள பணிப்பாளர் திருமதி குமுதினி வெல்மில்கே ஆகியோர், கொழும்பில் இடம்பெற்ற விசேட வைபவம் ஒன்றின் போது CBL இன் சார்பில் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.   

Great Place to Work  இந்தியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் Great Place to Work  ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் பிரசஞ்ஜித் பட்டாச்சாரியா மற்றும் Great Place to Work  ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி ஷனிக்கா ரத்நாயக்க ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.  

Great Place to Work சான்றிதழ் பெற்றமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் கருணாரத்ன, “CBL இந்த விருதை வென்றுள்ளமை பெரும் கௌரவத்தைப் பெற்றுக்கொ டுத்துள்ளது. இது எமக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. விசேடமாக, தொழில் வாழ்க்கை, சமநிலை, சமூகத்துக்கு CBL உடன் உள்ள தொடர்பு என்பன பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளன. இந்த விருது ஊழியர்களின் ஈடுபாட்டையும், கடின உழைப்பையும் உறுதிப்படுத்துவது மாத்திரமன்றி, ஒற்றுமையான சிறந்த வேலைத் தளத்தை CBL எப்போதும் ஆதரிக்கிறது என்பதையும் வௌிப்படுத்துகிறது.  வாழ்க்கையில் எந்தளவுக்கு வரவேற்பும் பெறுமதியும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது இங்கு உறுதியாகிறது” என்றும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .