2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

Ceylinco Life கடவத்தை கிளை நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

Gavitha   / 2017 பெப்ரவரி 01 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ceylinco Life, கடவத்தையில் அதன் சொந்த காணியில் சுற்றாடல் சாதகமான புதிய கிளைக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டியிருந்ததோடு, நிறுவனத்தின் 29ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றது.  

15ஏ, ஜாயா மாவத்தை, கடவத்தையில் நிறுவப்படும் புதியக் கிளைக் கட்டடம் பூர்த்தி அடைந்ததும் 5,870 சதுர அடி பரப்பில் தற்போதைக்கு இரண்டு மாடிகளைக் கொண்டதாகவும் பின்னர் நான்கு மாடிகள் வரை விஸ்தரிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கிளை அலுவலகம் அமையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இயன்ற அளவு இயற்கை ஒளியை பெற்றுக் கொள்ளும் வகையில் நிறுவப்பட இருக்கும் புதிய கட்டடத்துக்கு முழுமையாக சூரிய சக்தி வழங்கப்படும். ஆகப்பிந்திய எரிசக்தி சேமிப்பு முறைமையும் வளிச்சீரக்கியும் மழைநீர் சேகரிப்பு முறைமையும் ஏற்படுத்தப்படுவதோடு, ஒரே தடவையில் 10 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகன தரிப்பு நிலையமும் அமைக்கப்படும். 

Ceylinco Life முகாமைப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர். ரெங்கநாதன், சக பணிப்பாளர்கள், சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் சகிதம் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். 

பல கிளைகளை எரிசக்தியை மீதப்படுத்தக் கூடியதாக மாற்றி அமைப்பது என்று  Ceylinco Lifeஇன் திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் இதே போன்று வடிவமைக்கப்பட்ட சுற்றாடல் சாதகமான கிளைக் கட்டடங்களை ஹொரணை, பாணந்துறை ஆகிய இடங்களிலும் கம்பனி நிறுவியமை குறிப்பிடத்தக்கது. 

புதிய சுற்றாடல் சாதகமான முறையில் வடிவமைக்கப்பட்ட Vida Ceylinco Life கிளைகளில் வென்னப்புவ, பண்டாரவளை ஆகியன அடங்குகின்றன. அநுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, களுத்துறை, குருநாகல், கம்பஹா, காலி, மாத்தறை, திஸ்ஸமாஹாராம, நீர்கொழும்பு, இரத்தினப்புரி, கொட்டாஞ்சேனை, கல்கிஸை ஆகிய இடங்களில் அமைந்துள்ள கம்பனியின் அலுவலகக் கட்டடங்களும் சொந்தக் காணிகளிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் பல ஏற்கனவே சூரிய சக்திக்கு மாற்றப்பட்டுள்ளன.  

கொழும்பு 05 ஹெவ்லொக் வீதியில் அமைந்துள்ள Ceylinco Lifeஇன் தலைமை அலுவலகத்திலும் 13.7 மில்லியன் ரூபாய் செலவில் 63.18 கிலோவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X