Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
DHL Express நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அதியுயர் சேவைகளை வழங்கும் நோக்கில் அதன் வாகனப் படையணியில் புதிதாக 45 Mercedes-Benz Vito வண்டிகளை இணைத்துள்ளமை குறித்து அண்மையில் அறிவித்திருந்தது.
அதிவேக சேவை வழங்குநர்களுள் இந்த நாட்டின் மிகப் பெரியதும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 2ஆவது இடத்திலும் DHL உள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தக தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில்; நிறுவனத்தின் வாகனத்திறன் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. இலங்கையில் சரக்கியல் சேவை வழங்குநராக சான்றளிக்கப்பட்ட ஒரேயொரு போக்குவரத்து சொத்துப் பாதுகாப்பு சங்கமாக DHL அதன் நிலையை வலியுறுத்திக் கொண்டுள்ளது.
'எமது வாடிக்கையாளருக்காக உயர் பாதுகாப்பு மற்றும் இணக்கப்பாட்டை வழங்குவதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளோம். Diesel &Motor Engineering PLC உடன் மேற்கொண்ட கைகோர்ப்பின் ஊடாக எமது வாகன போக்குவரத்து வசதியை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், அதனூடாக எமது வலையமைப்பை விஸ்தரித்துக் கொள்ளவும் முடிந்துள்ளது. 20 வீத வளர்ச்சியுடன், எமது புதிய Mercedes-Benz Vito வாகனங்களின் ஊடாகநாட்டின் வளர்ந்துவரும் சர்வதேச அதிவேக சேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும்' என DHL Express ஸ்ரீலங்காவின் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமையதிகாரி திமித்ரி பெரேரா தெரிவித்தார்.
மத்திய அளவில் கவர்ச்சிகரமான வான் வகையான Mercedes-Benz Vito பரந்தளவான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. வர்த்தக நோக்கங்களுக்காக, விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வான் தெரிவில், டயர் அழுத்த கண்காணிப்பு, ஓட்டுனர் வழிகாட்டல் செயற்பாடுகள், வெளிப்புற ஒளிக்கேற்ற பிரேக் விளக்குகள், ஓட்டுனரின் தூக்க நிலைமைகளை கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு கமெராக்கள் போன்ற பல்வேறு விசேட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
38 minute ago
48 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
48 minute ago
1 hours ago
3 hours ago