2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

DIMOக்கு Daimlerஇன் கௌரவிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 25 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

Mercedes-Benz மற்றும் Daimler AG ஆகியன ஒன்றிணைந்து, தமது வருடாந்த Mercedes-Benz மிகச் சிறந்த சேவைக்கான விருது (SE Award) மாநாட்டை வியட்நாமின் ஹோ ஷி மின் (Ho Chi Minh) மாநகரில் அண்மையில் நடத்தியிருந்தன. SE Awardஆனது 2005ஆம் ஆண்டில் Daimler AGஇனால் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது இந்த பெருமதிப்பைத் தமதாக்கிக் கொள்வதற்காக இலங்கை உட்பட தென்கிழக்காசிய வலயத்தைச் சார்ந்த 85 இற்கும் மேற்பட்ட Mercedes-Benz முகவர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம், புரூணை, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த Mercedes-Benz விற்பனைக்குப் பிந்திய சேவைகளுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரிகளை ஒன்றுகூட்டி, பங்குபற்றும் நாடுகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சேவை மட்டங்கள் தொடர்பான திருப்தியை அதிகரிக்கும் நோக்குடன் SEAward எனப்படுகின்ற ஊக்குவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.  வருடாந்த SE Award முடிவுகளை அறிவிப்பதற்குப் புறம்பாக, வியட்னாமின் ஹோ ஷி மின் நகரில் ஒரு நாள் மாநாடு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. DIMO நிறுவனத்தின் பிரயாணத்தேவை வாகனங்கள் பிரிவின் சேவைகளுக்கான பொது முகாமையாளரான தரங்க குணவர்த்தன அவர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.

வாடிக்கையாளர் திருப்தி மட்டத்தை அதிகரித்தல், மிகச் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மட்டப் புள்ளிகள் தொடர்பான Daimlerஇன் ஏனைய பல்வேறுபட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பான பல்வேறு முக்கிய செயற்பாடுகளும் இதில் அடங்கியிருந்தன.Mercedes-Benz மோட்டார் கார்களின் வெளிநாடுகளுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறை தலைமை அதிகாரியும், தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களுக்கான விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்கான தலைமை அதிகாரியுமான வேர்னர் ஸ்கிமிட் நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து முகவர்களுக்கும் தனது நன்றியையும், பாராட்டுக்களையும் வெளிப்படுத்தினார்.

மூன்று முனை நட்சத்திர இலச்சினையின் நன்மதிப்பைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாத்து, அதிசிறந்த சேவையை வழங்குவதை உறுதிசெய்த அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களது விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடனான உழைப்புக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், பிராந்தியத்தில் Mercedes-Benzஇன் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் வாடிக்கையாளர் உறவுமுறை நிகழ்ச்சித்திட்டங்களின் அடிப்படையில் விற்பனை, விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான மேம்பாடுகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X