Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
Melsta Regal Finance Limited தனது புதிய வர்த்தக நாம அடையாளமான “Fintrex Finance Limited” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Melstacorp PLC இன் உரிமையாண்மையை Blue Stone 1 Pvt Limited கொள்முதல் செய்துள்ளமையைத் தொடர்ந்து, இப்புதிய வர்த்தக நாமமும் உதயமாகியுள்ளது.
இந்த முதலீட்டாளர்கள் பட்டியலில் சர்வதேச பெரும் காப்புறுதி நிறுவனமான Fairfax 70% பங்குகளையும், உள்நாட்டு கூட்டு வர்த்தக பெரு நிறுவனங்களான MAS மற்றும் Hidramani Group ஆகியன 24% பங்குகளைக் கொண்டுள்ளதுடன், எஞ்சிய 6% பங்குகளை சில தனிநபர்கள் கொண்டுள்ளனர்.
முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புகழ்பெற்ற தொழில்துறை பிரபலங்களும், வர்த்தகத்துறையில் ஆழமான அறிவும், சிறந்த தொழிற்றுறை வரலாற்றையும் கொண்டுள்ளதுடன், நிறுவனத்தை மகத்தான உச்சத்துக்கு இட்டுச்செல்லும் வகையில், அதனை வழிநடத்தும் திறன் மிக்க அஜித் குணவர்த்தன பணிப்பாளர் சபைத் தலைவராகவும், றொனி பீரிஸ், ஷான்துனு நக்பால் ஆகியோர் சபைப் பணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே, அதன் பணிப்பாளர் சபையில் சுயாதீன பணிப்பாளர்களாகச் சேவையாற்றியவர்களும் தமது பல்துறை அனுபவத்தின் மூலமாக பணிப்பாளர் சபைக்குத் தமது பங்களிப்பை வழங்குவர்.
ஆகவே, Fintrex Finance நிறுவனத்துக்குத் தேவையான தலைமைத்துவம், முகாமைத்துவ வழிகாட்டலை வழங்க, இலக்கினைச் சிறந்த முறையில் அடையப்பெறும் ஆற்றல் கொண்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களை அது கொண்டுள்ளது.
பணிப்பாளர் சபைத் தலைவரான அஜித் குணவர்த்தன உரையாற்றுகையில், “நிதியியல் தொழில் முயற்சியாளர்கள், வல்லுநர்கள் ஆகிய இரு சொற்பதங்களின் இணைப்பாகவே Fintrex Finance என்ற நாமம் உருவாகியுள்ளது. ஏனைய நிறுவனங்களை விடவும் தனித்துவமான ஸ்தானத்தில் திகழச் செய்கின்ற ஒரு வலுவான இணைப்பை இது பிரதிபலிக்கின்றது. முயற்சிகளை உச்சப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பெறுமதியை வெளிக்கொணருவதில் அணி கொண்டுள்ள வளர்ச்சி வாய்ப்புகளை இப்புதிய வர்த்தகநாம அடையாளம் பிரதிபலிக்கின்றது. நிறுவனம், தொழிற்துறை சார்ந்த தோற்றபாடுகளை மாற்றியமைப்பதற்கு மிகவும் முக்கியமான செய்கை, வேகம், சுறுசுறுப்பு ஆகியவற்றின் தெளிவான சமிக்ஞையாக இது அமைந்துள்ளது” எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “இலங்கையில் வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர்கள், சிறு அளவிலான தொழிற்துறைகளைப் பொறுத்தவரையில், அவற்றின் வளர்ச்சி வாய்ப்புகளை முன்னெடுப்பதற்கு போதுமான அளவில் கடனுதவிகள் கிடைக்காமையால் அவற்றுக்கு நிதியியல் ரீதியான உதவிகளை வழங்கவேண்டும்” என்று அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
4 minute ago
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
52 minute ago