Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
Ford மற்றும் அதன் உள்நாட்டு விநியோகஸ்த்தர் Future Automobiles (Pvt) Ltd இணைந்து, வருட நிறைவை முன்னிட்டு Big Deal ஊக்குவிப்புத்திட்டத்தை நாடு முழுவதிலும் அறிமுகம் செய்துள்ளன. தெரிவு செய்யப்பட்ட Ford மாதிரிகளுக்கு 2016
டிசெம்பர் 31ஆம் திகதி வரை கவர்ச்சிகரமான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
Ford மோட்டார் கம்பனியின் மலேசியா மற்றும் தென்கொரியா, ஆசிய பசுபிக் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான முகாமைத்துவ பணிப்பாளர் பேகஸ் சுசன்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இந்த வருடம் இலங்கையில் Big Deal ஊக்குவிப்புத்திட்டத்தை அறிமுகம் செய்வதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
“Big Deal ஊக்குவிப்புத்திட்டத்தின் மூலமாக, எமது Ford குடும்பத்தை விஸ்தரிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், எமது சர்வதேச Ford வாகனங்களுக்கு மிகச்சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன” என்றார்.
Ranger, Fiesta மற்றும் Kuga மாதிரிகளை குறித்த சலுகைக்காலத்தில் கொள்வனவு செய்யும் சகல வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக்காலம் முன்பாகவே வந்துவிடும். குறித்த வாடிக்கையாளர்களுக்கு பென்தொட்ட Centara Ceysands இல் வார இறுதியை இருவருக்கு செலவிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த ஊக்குவிப்பு காலப்பகுதியில், Everest மாதிரியைக் கொள்வனவு செய்யும் சகல வாடிக்கையாளர்களுக்கும், இருவருக்கு பாங்கொக் நகருக்கு பயணிப்பதற்கு விமானப் பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதுடன், இரு இரவுகள் தங்கியிருப்பதற்கான தங்குமிட வசதிகள் போன்றன வழங்கப்படும்.
Ranger இன் “Built Ford Tough’ எனும் நிலை, சந்தையில் காணப்படும் திறன் வாய்ந்த ட்ரக் ஒன்றாக அதை தரமுயர்த்தியுள்ளதுடன், வெவ்வேறு சூழல்கள், பாரதூரமான வெப்பநிலைகள் மற்றும் கரமுரடான பகுதிகளில் பயணிக்கக்கூடிய திறன் கொண்டது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago