2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

MAS நிறுவனத்துக்கு 11 விருதுகள்

Editorial   / 2018 மே 03 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவமைப்பு முதல் விநியோகம் வரையிலான ஆடைத்துறைத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் MAS ஹோல்டிங்ஸ், அண்மையில் இடம்பெற்ற JASTECA விருதுகளின் போது, 11 விருதுகளை வென்றிருந்தது. 

நாட்டின் 5S, Kaizen மற்றும் குழும சமூகப் பொறுப்பு ஆகிய பிரிவுகளில், ஜப்பான் - ஸ்ரீ லங்கா தொழில்நுட்ப மற்றும் கலாசார நிறுவனத்தால் (JASTECA) ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் மிகச்சிறந்த நிறுவனமாக அது அடையாளம் காணப்பட்டுள்ளது.JASTECA விருது வழங்கும் வைபவத்தில், நாட்டின் ஏனைய மிகப்பெரிய போட்டியாளர்களிடையே MAS நிறுவனம் 11 விருதுகளைச் சுவீகரித்துக் கொண்டது.

Taiki Akimoto 5S வைபவத்தில் தங்க, வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளையும், Nagaaki Yamamoto KAIZEN வைபவத்தில் வெள்ளி மற்றும் ஆறுதல் பரிசுகளையும் இயென் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த JASTECA குழும சமூகப் பொறுப்பு / பேண் தகைமை விருதுகளில் வெண்கல மற்றும் ஆறுதல் பரிசுகளையும் அது வென்றுள்ளது.  

JASTECA 5S, இலங்கையில் 5S தொடர்பில் இடம்பெற்று வரும் வருடாந்தப் போட்டியாகக் கருதப்படுகிறது. இது, நாட்டின் மிகச் சிறந்த லீன் உற்பத்தி நிறுவனங்களுக்காகப் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. JASTECA விருதுகள் இலங்கையின் மிகச்சிறந்த 5S பயன்பாட்டாளர்களை இனங்கண்டு, தங்க, வெள்ளி, வெண்கல விருதுகளுடன், ஆறுதல் பரிசுகளும் வழங்கியிருந்தது.

இதன் பிரதான பிரிவுகளாக 5S, Kaizen, குழும சமூகப் பொறுப்பு மற்றும் நிலையான தன்மை என்பன கருதப்படுகின்றன. சிறிய நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என்ற ரீதியில் இவை பிரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .