Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 13 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கியின் துணை நிறுவனமான மேர்ச்சன்ட் பேங்க் ஒஃப் ஸ்ரீ லங்கா (MBSL), தனது புதிய சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையான “MBSL விதுபியச’ திட்டத்தை, அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
தேசத்தின் பிள்ளைகளுக்கு, தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அவர்களது அத்துறைசார் அறிவை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு, மோர்ச்சன்ட் பேங்க் ஒஃப் ஸ்ரீ லங்கா, இந்தப் புதிய சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அதன் பிரகாரம், முதலாவது “MBSL விதுபியச’ கணினி நிலையம், மேர்ச்சன்ட் பேங்க் ஒஃப் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சுஜீவ லொக்குஹேவா மற்றும் விமானப் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் நிசங்க ஈரியகம ஆகியோரது பங்குபற்றலுடன், எம்பிலிபிட்டிய - துங்கம, ஸ்ரீ குணாநந்தாராம விஹாரையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வு, ஸ்ரீ குணாநந்தாராம விஹாரையின் விஹாராதிபதி ஹபரகட பஞ்ஞானந்த தேரரின் ஆசியுடன் நடைபெற்றது.
“MBSL விதுபியச’ நிலையம், விமானப் படைப்பிரிவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
மேர்ச்சன்ட் பெங்க் ஒஃப் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சுஜீவ லொக்குஹேவா, MBSL விதுபியச கணினி நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்காக நடைபெறும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “நாடு தற்போது, புதிய அபிவிருத்திப் பாதையில் பயணிக்கிறது. இதில், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள சிறுவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும். அதற்காக, அவர்களுக்குப் புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொடுப்பது அவசியமானது.
“எம்பிலிபிட்டிய நகருக்குரித்தான துங்கம போன்ற பின்தங்கிய பிரதேசத்துக்கு, நவீன கணினி இயந்திரங்களுடனான நிலையமொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு, நாம் கருமமாற்றினோம்” என்றார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்தச் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைக்காக, எம்முடன் கைகோர்த்துள்ள விமானப் படைப்பிரிவுக்கு, நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.
“இந்தத் திட்டத்தைப் பூர்த்திசெய்வதற்கு, அவர்கள் அர்ப்பணிப்புடன் வெவ்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியிருந்தனர். குழந்தைகளுக்கு வழிகாட்டும் விஹாரையொன்றில், இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பயில்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, நாம் அனைவரும் பெற்ற பேறாகக் கருத வேண்டும்.
“மேர்ச்சன்ட் பேங்க் ஒஃப் ஸ்ரீ லங்கா, இலாப நோக்கமின்றி, நாம் உயிர் வாழும் சமூகத்தின் பொது அபிவிருத்திக்காக, வெவ்வேறு சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறது.
“எதிர்வரும் காலங்களில், இதுபோன்ற பல கணினி மையங்களை நிறுவ, நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago