Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 03 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
1999 ஆம் ஆண்டு உலக சேமிப்புத் தினத்தில் NSBஇன் இத்துரு மித்துரு என்ற இளைஞர்களுக்கான சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய மட்டத்தில் இளைஞர்களிடத்தில் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கும் வகையில், இலங்கை இளைஞர்களுக்கு என்று விசேடமாக வடிவமைக்கப்பட்ட கவர்ச்சிகரமான சேமிப்புக் கணக்காக தேசிய சேமிப்பு வங்கி இத்துரு மித்துருவை அறிமுகப்படுத்தியிருந்தது.
தேசிய சேமிப்பு வங்கியின் இத்தரு மித்துரு கணக்கு இன்று வரைக்கும் நாட்டின் இளைஞர்களிடத்தில் பிரசித்தி பெற்றதாகக் காணப்படுகின்றது. இத்தகைய செல்வாக்குப் பெற்ற இத்துரு மித்துரு கணக்கு, கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா கொட்டலில் நடைபெற்ற நிகழ்வில், NSB i’m என மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
NSB i’m கணக்கை 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட அனைவரும் தேசிய சேமிப்பு வங்கியில் ஆரம்பித்தக் கொள்ள முடியும். இந்தக் கணக்கை ஒருவர் தனது 35 வயது வரை பேணமுடியும்.
இந்தக் கணக்கை ஆரம்பிப்பதற்கு ஆகக் குறைந்த தொகையாக ரூபாய் 2,000 எனச் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அவரவர் தமது நிநிநிலைமைக்குத் தக்கவாறு இதற்கு மேற்பட்ட தொகையையும் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம்.
இவ்வாறு வைப்பிலிடப்படும் தொகைக்கு அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய வட்டி வழங்கப்படும். இதைவிட, மேலதிக பயன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.அதாவது, பணத்தை NSB i’m கணக்கில் வைப்பிலிடும்போது, பெறுமதியான அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும். தொப்பிகள், கோப்பைகள், கொப்பிகள் போன்றவை NSB i’m சின்னம் பொறிக்கப்பட்டு தரப்படும்.
இவற்றைவிட, NSB i’m கணக்கிலுள்ள தொகையின் இரண்டு சதவீதம் பெறுமதியான ஆச்சரியமளிக்கும் அன்பளிப்புகள் கணக்கு உரித்தாளரின் 21 ஆவது பிறந்த தினத்தின்போது வழங்கப்படும் திட்டமும் இந்தவகையான சேமிப்புக் கணக்கின் சிறப்புகளுக்குக் காரணமாகும்.
இதைவிட முக்கியமான அம்சமாக, NSB i’m கணக்கு உரித்தாளர் தனது 21 ஆவது வயது பிறந்த தினத்தின்போது, பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடருபவரானால் அவருக்கு ஆச்சரியமளிக்கும் வகையிலாக, கணக்கிலுள்ள மொத்தத் தொகையில் 2.5 சதவீதமான அன்பளிப்பு டோக்கன் வழங்கப்படும்.
மேலும், NSB i’m கணக்கை பேணுவோருக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் காப்புறுதிச் சலுகையையும் பெற்றுக்கொள்ளும் உரித்தாளர் ஆகிறார்.
தேசிய சேமிப்பு வங்கியின் i’m கணக்கை வைத்திருப்போர், உயர்கல்விக்கான வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும். குறித்த கணக்கை வைத்திருப்போர், ‘புத்தி கல்விக் கடன்’ திட்டத்தினூடாக உயர்கல்விக்கான கடனை பெறுவர். அத்துடன், முயற்சியுடைய இளைய தலைமுறையினரின் எதிர்கால முதலீடுகளுக்கான, முதலீடுகளையும் வழங்கி இளைஞர்களை முன்னேற்றுவதில் தேசிய சேமிப்பு வங்கி i’m கணக்கினூடாக செயற்பட்டு வருகின்றது.
இலங்கை இளைய சமுதாயத்துக்கான விசேடமாகத் திட்டமிடப்பட்ட NSB i’m கணக்கு பல பயனுள்ள சலுகைகளை வழங்குகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago