2025 ஜூலை 24, வியாழக்கிழமை

NTB யின் மிலேனியம் கிளை மெருகேற்றம்

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம் மாவத்தையில் அமைந்துள்ள நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் மிலேனியம் கிளை, நவீன வசதிகளுடன் மீளத்திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

புதிதாக மீளத்திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தக்கிளை ஏற்கெனவே காணப்பட்ட முகவரியில் அமைந்துள்ளதுடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் முழு அளவிலான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

முறையாக வடிவமைக்கப்பட்ட பகுதியில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தச்சேவைகளை வழங்க வங்கி முன்வந்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள், அங்கத்தவர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பதில் பொது முகாமையாளர் இந்திரஜித் போயாகொட கலந்து கொண்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .