2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

New Anthoney’s Farms இன் e-வணிக கட்டமைப்பு வசதி

S.Sekar   / 2022 மார்ச் 18 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

New Anthoney’s Farms (Private) Ltd இனால், வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கு தரமான கோழி இறைச்சியை இலவசமாக தருவித்துக் கொள்ளும் புதிய e-வணிகக் கட்டமைப்பான ‘Dorakadapaliya’ என்பதை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

சுவை நிறைந்த கோழி இறைச்சி தயாரிப்புகளை நாடு முழுவதிலும் விநியோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட Dorakadapaliya கட்டமைப்பினூடாக, சிறந்த மற்றும் பாதுகாப்பான கோழி இறைச்சியை, வாடிக்கையாளர்கள் தமது இருப்பிடத்துக்கு தருவித்துப் பெற்றுக் கொள்ள முடியும். புகழ்பெற்ற HarithaHari தெரிவுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையானவற்றை தெரிவு செய்து கொள்ள முடியும். Dorakadapaliya இனால் நாடு முழுவதிலும் விநியோக சேவை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் தமது இருப்பிடங்களிலிருந்து சௌகரியமான முறையில் ஒரு பொத்தனை அழுத்தி, இலகுவாக தமக்கு தேவையான கோழி இறைச்சியை பெற்றுக் கொள்ள முடியும்.

மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய அல்லது கொம்போஸ்ட் ஆக்கக்கூடிய, இலகுவில் உக்கக்கூடிய பொதியில் விற்பனையாகும் HarithaHari தெரிவுக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்களால் நாவூறும் கிறிஸ்பி சிக்கன் தெரிவான ‘Crizzpy’s’ கோழி இறைச்சித் தெரிவுகளிலிருந்தும் தமக்கு தேவையானதை பெற்றுக் கொள்ள முடியும். கொண்டாட்டங்கள் மற்றும் ஏதேனும் விசேட நிகழ்வுகளுகு்கு மிகவும் பொருத்தமான, பிரீமியம் தெரிவான கிரில், பேக் அல்லது BBQ முறையில் தயாரித்துக் கொள்ளக்கூடிய சகல இயற்கையான மூலப்பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்படும் ‘SpicyDycy’அல்லது சிறந்த ‘Chico’ தெரிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

New Anthoney’s Farms இன் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “நாடு முழுவதிலுமுள்ள எமது வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, எமது ஒன்லைன் விற்பனைப் பகுதியை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள போது, வாடிக்கையாளர்களின் தன்னிறைவு என்பதற்கு நாம் முக்கியத்துவமளிக்கின்றோம். எமது பல செயற்பாடுகள் இதனை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன. இது ஒரு சாதாரண பிரிவு விரிவாக்கம் மாத்திரமன்றி, நுகர்வோர் மத்தியில் உறுதியான உறவை பேணும் நாம், தரமான கோழி இறைச்சி வகைகளை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்படுத்தியுள்ள அடிப்படை வசதியாகவே கருதுகின்றோம்.” என்றார்.

New Anthoney’s Farm இன் Haritha Hari என்பது, முற்றிலும் இயற்கையான செயன்முறையாக அமைந்திருப்பதுடன், போஷாக்கு நிறைந்த மற்றும் எந்தவொரு அன்ரிபயோடிக் அல்லது ஹோர்மோன் திரிபு அற்ற முறையில் பேணப்பட்டு, முற்றிலும் இயற்கையான தீனிக்களை வழங்கி தயாரிக்கப்படுகின்றது. அதிகளவு இடவசதி மற்றும் அழுத்தமில்லாத சூழலில், ஆரோக்கியமான கோழி வளர்ப்பில் ஈடுபடுவது என்பது New Anthoney’s Farms க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. விலங்கு நலன், பாதுகாப்பு மற்றும் சுகாதார நியமங்கள் போன்றன தொடர்பான பொறுப்புகள் உற்பத்தியாளரின் கலாசாரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்களாக காணப்படுவதுடன், அமெரிக்காவின் தேசிய கோழி இறைச்சி சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .