Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஆயுள் காப்புறுதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் முயற்சிகள், அர்ப்பணிப்புகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றுக்காக மீண்டுமொரு தடவை SLITAD விருதுகள் 2017 நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தது.
நான்காவது ஆண்டாக, இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையின் மாபெரும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பின்புலத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்கி வருகிறது.
இலங்கையின் கூட்டாண்மை உலகில் பொது மற்றும் தனியார் துறைகளைச்சேர்ந்த நிறுவனங்களை, இந்த விருது கௌரவித்து வருவதுடன், மனித வளங்கள் துறையில் பின்பற்றும் சிறந்த செயன்முறைகள் மற்றும் பயிற்சிகள் போன்றன இந்தக் கௌரவிப்புக்காகத் தெரிவு செய்யப்படுகின்றன. மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து, இந்த விருதுகளில் பங்கேற்பதற்காக 17 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
2013 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் நடைபெற்ற விருதுகள் வழங்கலின்போது, தங்க விருதுகளையும் 2015இல் டயமன்ட் விருதையும் யூனியன் அஷ்யூரன்ஸ் சுவிகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், வழங்கப்பட்ட ஒரே பிளாட்டினம் விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவிகரித்திருந்தமை விசேட அம்சமாகும். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, வரலாற்றில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருதாகக் கருதப்படுகிறது.
இந்தச் சிறந்த சாதனைகள் தொடர்பில் மனித வளங்கள் பிரிவின் பொது முகாமையாளர் சுரேஷ் முத்தையா கருத்துத் தெரிவிக்கையில், “மனித வளங்கள் பிரிவைச் சேர்ந்த நாம், பின்பற்றி வரும் சிறந்த செயன்முறைகளுக்காகத் தொடர்ச்சியாகப் பெருமளவு விருதுகளைச் சுவிகரிக்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். புத்தாக்கமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் எனும் வகையில், எமது ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்துவது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். சக ஊழியர்களுக்குத் தொழில்நிலை முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
ஊழியர்களின் திறமையான செயற்பாடுகளைக் கௌரவிப்பதுடன், அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி வரும் நிறுவனம் எனும் வகையில், இது போன்ற கௌரவிப்புகள் எதிர்காலத்தில் எய்தப்படவுள்ள பல சாதனைகளுக்குப் பெறுமதி சேர்ப்பதாக அமைந்துள்ளன. மேலும், இந்த நடவடிக்கை முழுச் செயலணிக்கும் எல்லைகளுக்கு அப்பால் சென்று சிறப்பை எய்த ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.
14 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago