S.Sekar / 2021 ஜூலை 26 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு Multi Para Monitor ஒன்றை அன்பளிப்பு செய்திருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த நன்கொடையை மேற்கொண்டிருந்தது.

குருநாகல் மாவட்டத்திலுள்ள இரண்டாவது பாரிய வைத்தியசாலையாக இது திகழ்வதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இந்த சாதனம் பயன்படுத்தப்படும்.
SLT-MOBITEL இன் பிராந்திய தலைமை அதிகாரி ரன்மல் பொன்சேகா மற்றும் SLT-MOBITEL இன் பிராந்திய டெலிகொம் முகாமையாளர் சானக உதயங்க ஆகியோர் இந்த சாதனத்தை, குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். பிரபாத் வீரவத்தவிடம் கையளித்திருந்தார்.
இந்நிகழ்வில் SLT-MOBITEL இன் மாவட்ட முகாமையாளர் நிரோஷ கருணாரட்ன, திட்டமிடல் மருத்துவ அதிகாரி வைத்தியர். மதுஷ சத்குமார மற்றும் வைத்தியசாலையின் மேற்பார்வைமாது எம்.எம்.ஏ.மாரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026