2022 ஜூலை 04, திங்கட்கிழமை

SLT-MOBITEL இன் 5G பரீட்சார்த்த வலையமைப்பு விஸ்தரிப்பு

S.Sekar   / 2022 ஜூன் 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தொலைத் தொடர்பாடல் தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது 5G வணிக அறிமுகத்துக்கு முன்னரான பரீட்சார்த்த வலையமைப்பு விஸ்தரிப்பு நடவடிக்கைகளை நாட்டின் பிரதான நகரங்களில் முன்னெடுத்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மொபைல் புரோட்பான்ட் மற்றும் நிலையான வயர்லெஸ் அணுகல் கட்டமைப்புகளில் 5G இன் அதிவேக தொழில்நுட்ப அனுகூலங்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

5G பயன்படுத்தக்கூடிய சாதனத்தைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, SLT-MOBITEL இன் 5G வணிக அறிமுகத்துக்கு முன்னரான பரீட்சார்த்த வலையமைப்பு சேவையை கொழும்பு, கண்டி, அனுராதபுரம், காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதான நகரங்களில் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

மேலும், SLT-MOBITEL இனால் அண்மையில் புதிய 5G உட்கட்டமைப்பு வசதிகள் கொழும்பில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 5G திறனுடைய சாதனத்தை கொண்டிருக்காத வாடிக்கையாளர்கள் வரையறுக்கப்பட்ட SLT-MOBITEL விற்பனையகமொன்றுக்கு விஜயம் செய்து 5G தொழில்நுட்பத்தை அனுபவிக்க முடியும்.

 அதிவேகம், பரந்த இணைப்பு, புதிய உள்ளடக்கமான அனுபவங்கள் போன்றவற்றைக் கொண்ட அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொடர்பாடல் அம்சமாக 5G அமைந்துள்ளது. HD Video Streaming, Augmented Reality, Virtual Reality, Factory Automation, Remote Operations, Mission Critical Communications, Massive IOT மற்றும் பரந்தளவு எல்லைகளற்ற இணைப்பு வசதிகளை நுகர்வோருக்கும், வர்த்தகங்களுக்கும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்பில் முன்னோடி எனும் வகையில், SLT-MOBITEL இனால் நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்துக்கான தேவை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

 2019 ஆம் ஆண்டு முதல், SLT-MOBITEL இனால் நாடு முழுவதிலும் 5G அறிமுகப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் மாதத்தில், SLT-MOBITEL மொபைலினால் தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது மொபைல் வலையமைப்பினூடாக வணிக மொபைல் ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை தனது 5G வலையமைப்புடன் சாதனை மிகுந்த வேகத்தில் இணைத்து 5G ஐ அறிமுகம் செய்திருந்தது.

தற்போது, இலங்கையில் 5G வணிக செயற்பாடுகளுக்கான அனுமதியை பெற்றுக் கொடுக்கும் செயன்முறை இலங்கை தொலைத்தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளது. உரிய அனுமதிகள் வழங்கப்பட்டதன் பின்னர், SLT-MOBITEL இனால் அதன் 5G வலையமைப்பை மேலும் விரிவாக்கம் செய்து, டிஜிட்டல் மேம்படுத்தலை முன்னெடுப்பதுடன், அதிகம் உள்ளடக்கமான டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.

தேசத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில் SLT-MOBITEL இனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கப்படுவதுடன், அதில் 5G, Narrowband Internet of things (NB-IoT), Mission Critical Communications (MCPTT), Artificial Intelligence (AI) போன்றன அடங்கியுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற இணைப்புத்திறனை அனுபவிக்கச் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் உயர் பாவனையாளர் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றுக்காக SLT-MOBITEL மொபைலுக்கு Ookla® இனால் இலங்கையின் வேகமான மொபைல் வலையமைப்பு 2021 எனும் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக இந்த கௌரவிப்பை SLT-MOBITEL பெற்றிருந்தது. நிலையான மற்றும் மொபைல் புரோட்பான்ட் வலையமைப்பு பரிசோதனை அப்ளிகேஷன், டேட்டா மற்றும் பகுப்பாய்வு செயற்பாடுகளில் சர்வதேச முன்னோடியாக Ookla® அமைந்துள்ளது. விருதினூடாக SLT-MOBITEL இன் வலையமைப்பு சிறப்பை மீளஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் உள்ளடக்கமான மற்றும் கிராமிய இணைப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் SLT-MOBITEL இனால் தேசிய மட்ட செயற்திட்டங்கள் TRCSL உடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன. இதில் தேசத்துக்கு 100% 4G LTE வலையமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் அடங்கியுள்ளது. வணிக ரீதியில் 5G வலையமைப்பு சேவைகளை அறிமுகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், SLT-MOBITEL இனால் 5G வலையமைப்பை மேம்படுத்தும் பணிகளில் தொடர்ச்சியான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இலங்கையின் புரோட்பான்ட் சேவைகளை மேம்படுத்துவதில் பெருமளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .