Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 18 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
Rosemere தொடர்மனைகளுடன் SLT-MOBITEL மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது. அதனூடாக வதிவாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட fibre-optic தொழினுட்பத்தினூடாக வலுவூட்டப்பட்ட PEO TV தீர்வை வழங்க SLT-MOBITEL முன்வந்துள்ளது.
SLT பிராந்திய வியாபாரங்கள், பொது முகாமையாளர் சேத்தன அத்தநாயக்க மற்றும் Rosemere தொடர்மனைகள் உரிமையாளர் நளிந்த தர்மசேன ஆகியோருக்கிடையிலான உடன்படிக்கையினூடாக இந்த பங்காண்மை கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த தொடர்மனை இல்லங்களில் வசிப்போருக்கு SLT-MOBITEL இன் நவீன ஃபைபர் உட்கட்டமைப்பினூடாக இல்லங்களுக்கு நேரடியாக டிஜிட்டல் களிப்பூட்டும் அம்சங்களை வழங்குவதாக இந்த கைகோர்ப்பு அமைந்திருக்கும்.
Rosemere தொடர்மனைகள் நவீன கட்டடக்கலை அம்சங்கள், ஸ்மார்ட் கட்டட உள்ளம்சங்கள் மற்றும் சௌகரியம் மற்றும் வசதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக புகழ்பெற்றுள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளதுடன், இந்த தொடர்மனையினூடாக, சிறந்த வசிப்பிட அனுபவத்துடன், உயர்தர வசதிகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பான மற்றும் சொகுசான சூழலை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Rosemere தொடர்மனைகள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தமது வாழ்க்கைமுறையை மேம்படுத்துவதற்கான சிறந்த வசதியாக அமைந்துள்ளது.
கைகோர்ப்பினூடாக, வசிப்போருக்கு இலங்கையின் முன்னணி IPTV கட்டமைப்பான PEO TV ஐ அணுகும் வசதி கிடைப்பதுடன், அதன் பரந்த high-definition அலைவரிசைகள், on-demand அம்சங்கள் மற்றும் உள்ளடக்கமான interactive அம்சங்கள் போன்றவற்றை அனுபவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை SLT-MOBITEL இன் அதிவேகமான ஃபைபர் இணைப்பினூடாக வழங்கப்படுவதால், தடங்கலில்லாத ஸ்ட்ரீமிங் மற்றும் உயர் படத் தரம் போன்றன சேர்க்கப்படுகின்றன.
இலங்கையில் டிஜிட்டல் களிப்பூட்டும் அம்சங்களை புரட்சிகரமானதாக்குவதற்கான SLT-MOBITEL இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தப் பங்காண்மை பிரதிபலிக்கிறது. நவீன PEO TV சேவைகளை ஒன்றிணைப்பதனூடாக, Rosemere தொடர்மனையின் வசிப்போரின் வாழ்க்கை அனுபவங்கள் பெருமளவு மேம்படுத்தப்படுவதுடன், உயர் களிப்பூட்டும் அம்சங்களை உயர் தரம் மற்றும் தங்கியிருக்கும் திறனினூடாக அனுபவிக்க வசதி ஏற்படுத்தப்படுகின்றது.
டிஜிட்டல் மாற்றியமைப்பில் முன்னோடி எனும் SLT-MOBITEL இன் நிலையை மேலும் உறுதி செய்துள்ளதுடன், இலங்கையர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான புத்தாக்கமான தீர்வுகளை வழங்குகின்றது. Rosemere தொடர்மனைகளில் PEO TV வசதியை நிறுவியுள்ளதனூடாக, அடுத்த தலைமுறை களிப்பூட்டும் அம்சங்களை பூர்த்தி செய்வதில் நவீன வாழிட பகுதிகளில் இணைப்புத் திறன் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மற்றுமொரு மைல்கல் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Aug 2025