Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 12 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பு சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள edotco Group Sdn Bhd (edotco), இலங்கையில் தனது செயற்பாடுகளை விஸ்தரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு நிகழ்வில், மலேசியாவின் சர்வதேச வியாபாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் பதில் பொதுச்செயலாளர் யாங் பேர்பாகியா தத்துக் இஷாம் இஷாக், மற்றும் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த தேஷப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள முதலாவது Smart Pole தீர்வை செயற்படுத்தியிருந்தனர்.
Smart Pole களின் அறிமுகத்துடன், இந்தத் திட்டத்தின் முதல் தொகுதி வலுச்சிக்கனமான தொலைத்தொடர்புத் தீர்வுகளை மரைன் டிரைவ் பகுதியில் நிறுவப்படும். பாரம்பரிய உட்கட்டமைப்புகளைப் போலன்றி, edotco வின் Smart City தீர்வுகள் நவீன தொழில்நுட்ப மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும்.
நகர அபிவிருத்தியில் அழகார்ந்த அமைப்புகளின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, எமது புத்தாக்கமான தீர்வுகள் நவீன நகரமயமாக்கலுக்கு பொருத்தமான வகையில் அமைந்துள்ளன. smart நகர இணைப்புக் கட்டமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், இவை விளம்பர பகுதிகள், சூழல்சார் தகவல் வளங்கள், மதிநுட்பமான வீதி விளக்குகள், மதிநுட்பமான வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் வெள்ளக் கண்காணிப்பு கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.
9 hours ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jul 2025