2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

SUNFO விடமிருந்து விருதைப் பெற்றுள்ள பெரன்டினா

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கத்திடமிருந்து (SUNFO) நிறுவனசார் சேவைச் சிறப்புகளுக்கான விருதை பெரன்டினா டிவலப்மன்ட் சேர்விசஸ் அண்மையில் பெற்றிருந்தது. நிலையான அபிவிருத்தி செயற்பாடுகள் தினமான 2015 செப்டெம்பர் 24 அன்று இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பயிற்சிப்பட்டறை மற்றும் பரிசளிப்பு வைபவத்தின் போது இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. 5 மாகாணங்களைச் சேர்ந்த 5 அமைப்புகளை இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கம் தெரிவு செய்து, பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலையான அபிவிருத்தி தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச இலக்குகள் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தது.

சப்ரகமுவ மாகாணத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு விசேட பயிற்சிப்பட்டறை ஒன்றை பெரன்டினா ஏற்பாடு செய்திருந்தது. இதில் நிலையான அபிவிருத்தியின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கங்களை இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கம் வழங்கியிருந்தது. யட்டியாந்தோட்டையில் அமைந்துள்ள மல்கி வரவேற்பு மண்டபத்தில் 2015 செப்டெம்பர் 13 ஆம் திகதி இந்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. 110 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். வறுமை இன்மை, பசியின்மை, சிறந்த சுகாதாரம் மற்றும் நலன், தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான நீர் மற்றும் தூய்மை, பெற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் தூய சக்தி, குறைந்த சமத்துவ வேறுபாடு, நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள், காலநிலை தாக்கம், சமாதானம் மற்றும் நீதி தொடர்பில் சர்வதேச இலக்குகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. பெரன்டினா பிரைட் மாணவர்கள் கல்வி புலமைப்பரிசிலைப் பெற்ற சுமார் 120 மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

பெரன்டினா மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கம் ஆகியன இணைந்து மட்டக்களப்பின் புனித. அந்தோனியார் மண்டபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக நிலையான அபிவிருத்தி தொடர்பிலான சர்வதேச இலக்குகள் தொடர்பில் விளக்கமளிக்கும் பயிற்சிப்பட்டறை ஒன்றை ஒக்டோபர் 03 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X