Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, 30 வருட பூர்த்தியை கொண்டாடுவதுடன், தனது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்ப்பதற்கு புத்தாக்கமான வழிமுறைகளை இனங்காண முன்வந்துள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ள ‘Travel the Island’ திட்டத்தில் தனது பங்காளர்களின் எண்ணிக்கையை வங்கி பெருமளவில் அதிகரித்துள்ளது.
இதனூடாக, கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு சேமிப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமது வேலைப்பளு நிறைந்த செயற்பாடுகளிலிருந்து, நாட்டின் இரம்மியமான பகுதிகளில் தமது பொழுதை செலவிடக்கூடியதாக இருக்கும்.
இந்தச் சேவை தொடர்பில் செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “நாடு முழுவதும் பயணம் செய்து, புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்வது என்பதில் நாம் அதிகளவு ஆர்வத்தை கொண்டுள்ளோம்.
‘இவ்வாறு பயணங்களை மேற்கொள்வது என்பது வாழ்வாதார தெரிவாகவும் அமைந்துள்ளது. வங்கியின் 30 வருட பாரம்பரியத்தை நாம் கட்டியெழுப்புவதுடன், செலான் வங்கியைச் சேர்ந்த நாம், எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் பெறுமதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதை புரிந்துள்ளோம்.
“இதற்கமைய, நாம் ‘Travel The Island with Seylan Cards’ எனும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்தோம். இது வாடிக்கையாளர்களுக்காக காணப்படும் விடுமுறையை செலவிடுவதற்கு மிகவும் பொருத்தமான அட்டையாக அமைந்துள்ளது.
“நாட்டின் மிகவும் இரம்மியமான பகுதிகளைப் பார்க்க சாதாரண விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். கடந்த ஆண்டின் நாம் அடைந்த வெற்றியை தொடர்ந்து, பரந்தளவு அனுபவத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் எமது பெறுமதி சேர்ப்பை ஈடுபடுத்த தீர்மானித்தோம்.
“எமது கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை உரிமையாளர்கள் விருந்தோம்பலுக்கான உயர் தர வர்த்தக நாமங்களில் பெருமளவு அனுகூலங்களை பெற்று, மனம் மறவாத நினைவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025