Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 18 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுனிலீவர் ஸ்ரீ லங்கா மற்றும் காகில்ஸ் புட் சிட்டி ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்த Shopping Star - பருவம் 4 ஊக்குவிப்புத்திட்டத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த டி. அருளானந்தம் வெற்றியாளராகத் தெரிவாகியிருந்தார். இந்த மாபெரும் இறுதி வெற்றியாளர் தெரிவு தலவத்துகொட காகில்ஸ் புட் சிட்டியில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து போட்டியாளர்கள் இதன் போது, 2 மில்லியன் ரூபாய் மாபெரும் பரிசுக்காகப் போட்டியிட்டிருந்தனர். இரண்டாம் பரிசாக 1 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருந்ததுடன், மூன்றாம் பரிசாக 500,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளைக் காலியைச் சேர்ந்த எம்.கே.என்.சமரசேகர மற்றும் கண்டியைச் சேர்ந்த ஓஷதி ஜினான்ஜலி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஏனைய 7 போட்டியாளர்களுக்கும் 50,000 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை யுனிலீவர் ஸ்ரீ லங்கா மற்றும் காகில்ஸ் புட் சிட்டி ஆகியன இணைந்து வழங்கியிருந்தன.
இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய அருளானந்தம் கருத்துத் தெரிவிக்கையில், “நான் இதுவரை அனுபவித்திருந்த மகிழ்ச்சிகரமான மற்றும் விறுவிறுப்பான அனுபவமாக இது அமைந்திருந்தது. மாவட்ட மட்ட போட்டியில் நான் தெரிவு செய்யப்பட்டது முதல், மாபெரும் இறுதிப்போட்டியில் மாபெரும் இறுதிப்பரிசை வென்றமை வரையில் நான் அனுபவித்த விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் வார்த்தைகளால் குறிப்பிட முடியாது. Shopping Star என்பது ஒப்பற்ற ஒரு ஊக்குவிப்புத்திட்டமாகும், இதன் மூலமாக மகிழ்ச்சியூட்டும் அனுபவம் வழங்கப்படுவதுடன், இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தமைக்காக யுனிலீவர் ஸ்ரீ லங்கா மற்றும் காகில்ஸ் புட் சிட்டி ஆகியவற்றுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
யுனிலீவர் ஸ்ரீ லங்காவின் தலைமை அதிகாரி கார்ல் குரூஸ் கருத்துத் தெரிவிக்கையில், “Shopping Star போட்டி என்பது எமது உண்மையான வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வெகுமதியளிக்கும் திட்டமாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் உறுதியான ஒன்றிணைவுகள் போன்றன எமது வெற்றிகரமான செயற்பாட்டுக்கும் சந்தையில் தலைமைத்துவம் வகிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. காகில்ஸ் புட் சிட்டி உடனான எமது பங்காண்மை என்பது, தொடர்ந்து வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் பங்குபற்றப் பெருமளவானோர் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், இறுதிப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
காகில்ஸ் புட் சிட்டியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதத் கொடிகார கருத்துத் தெரிவிக்கையில், “காகில்ஸ் புட் சிட்டியைச் சேர்ந்த நாம் நுகர்வோரை பிரத்தியேகமான வகையில் ஈடுபடுத்தும் விதத்தில் எமது வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறோம். எமது உண்மையான வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் Shopping Star போட்டியை நாம் அறிமுகம் செய்திருந்தோம். அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிரும் வகையிலும், களிப்பூட்டும் வகையிலும் இந்த போட்டியை முன்னெடுக்கிறோம். இந்த அனுபவப் போட்டியில் பங்கேற்றிருந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், விசேடமாக மாபெரும் இறுதிப்போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்” என்றார்.
15 minute ago
27 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
8 hours ago