Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் நிறைவடைந்த 16ஆவது SLIM வருடாந்த வர்த்தக நாமச்சிறப்பு 2017 நிகழ்வில், Idea குழுமத்தின் ‘Sivilima’ வர்த்தக நாமம் ‘ஆண்டின் சிறந்த புத்தாக்க வர்த்தக நாமம்’ தங்க விருதை சுவீகரித்திருந்தது. இந்த விருதுக்காக 5 வர்த்தக நாமங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்ததுடன், இவற்றிலிருந்து ‘Sivilima’ இந்த விருதுக்காக தெரிவாகியிருந்தது.
2013இல் அறிமுகம் செய்யப்பட்ட ‘Sivilima’ வர்த்தக நாமம், பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாமமாக திகழ்வதுடன், 05 வருட காலப்பகுதியினுள் புகழ்பெற்ற நாமமாக திகழ்கிறது. தனது பரந்தளவு தயாரிப்பு தெரிவுகளில் 42 காப்புரிமை வடிவமைப்புகளை கொண்டுள்ளமையும், மற்றுமொரு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சூழல் பாதுகாப்புக்கு ‘Sivilima’ பங்களிப்பை வழங்கி வருவதுடன், மரங்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றீட்டு தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணமுள்ளது. மேலும், உயர் தரம் வாய்ந்த சூழலுக்கு நட்பான தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சகல வீடமைப்பு தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை ‘Sivilima’ வர்த்தக நாமம் தன்வசம் கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் பண இருப்புக்கமைய அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில், நாடு முழுவதிலும் 400க்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. ‘Sivilima’ வலையமைப்பு இலங்கையில் காணப்படும் மாபெரும் வலையமைப்பாக அமைந்துள்ளதுடன், துறையில் புரட்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
‘Sivilima’ வர்த்தக நாமத்தின் கீழ், ‘i-Panel’ மற்றும் ‘i-Roof’ போன்றன உற்பத்தி செய்யப்படுவதுடன், அவை வாடிக்கையாளர்களுக்கு முறையாக விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் மாபெரும் ASA Polymer கூரை தொழிற்சாலையின் உரிமையாளராக Idea குழுமம் திகழ்கிறது. இது கட்டான பகுதியில் அமைந்துள்ளது. ‘Sivilima’ கிளை வலையமைப்பினூடாக வாடிக்கையாளர்களின் கூரைத்தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய பெருமளவான தீர்வுகள் வழங்கப்படுகின்றன. Idea குழுமம் தனது செயற்பாடுகளை ஹோட்டல்கள், நிர்மாணம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு விஸ்தரித்துள்ளது.
25 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
38 minute ago