Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 07 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
TAGS விருதுகள் 2024 இல் தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் தொழினுட்ப பிரிவில் தங்க விருதை SLT-MOBITEL சுவீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வு அண்மையில், கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வை இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகம் (CA Sri Lanka) ஏற்பாடு செய்திருந்தது. நிதியியல் மற்றும் நிதிசாரா அறிக்கையிடல் போன்றவற்றில் சிறப்புக்கான கௌரவிப்பை SLT-MOBITEL பெற்றுக் கொண்டது.
TAGS விருதுகளினூடாக, நிறுவனங்களினுள் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூரல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை போன்றன ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் விருதுகளின் தொனிப்பொருள் ‘The Digital Edge – Enriching Corporate Reporting Excellence,’ என்பதாக அமைந்திருந்தது. கூட்டாண்மை அறிக்கையிடலில் AI மற்றும் டிஜிட்டல் புத்தாக்கம் ஆகியவற்றின் மாற்றியமைப்பு பங்களிப்பை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
கூட்டாண்மை ஆளுகையில் உயர் நியமங்களை பேணுவது மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் புத்தாக்கத்துக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றில் உயர் நியமங்களுக்கான அர்ப்பணிப்பை SLT-MOBITEL இன் சாதனை வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் வருடாந்த நிதி அறிக்கையினூடாக இலங்கையின் மேம்படுத்தப்பட்ட இணைப்புத்திறன் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பில் தனது செயற்பாடுகளை பொருந்தச் செய்வதில் எய்தியுள்ள சாதனைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
தொழிற்துறையினுள் இந்த கௌரவிப்பை பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், விருதுகள் வழங்கும் நிகழ்வில் பல்வேறு துறைகளின் புகழ்பெற்ற நபர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, SLT-MOBITEL பிரதம நிதி அதிகாரி சஞ்ஜீவ சமரநாயக்க, பெருமைக்குரிய விருதை பெற்றுக் கொள்வதையும், அருகில், SLT இன் வருமான திரட்டல் பொது முகாமையாளர் அசங்க விமலரட்ன, காணப்படுகின்றார். அவர்களுடன், SLT-MOBITEL குழும கம்பனி செயலாளர் மஹேஷ் அதுகோரல, SLT சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி, SLT நிதிக் கணக்கீடு மற்றும் வரிகள் பொது முகாமையாளர் நிஷாந்த கருணாரட்ன, SLT இன் நிதி கணக்கீடு மற்றும் வரியிடல் பிரதி பொது முகாமையாளர் ஜயலத் பீரிஸ், மற்றும் SLT செயற்படுத்தல் மற்றும் பிரிவு விருத்தி பிரதி பொது முகாமையாளர் ஆன் பெர்னான்டோ ஆகியோர் காணப்படுகின்றனர்.
9 hours ago
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Aug 2025
23 Aug 2025