Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 30 , மு.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய செரமிக் வர்த்தக நாமமான ‘Villeroy & Boch’ இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mezma டிரேடிங் லங்கா பிரைவட் லிமிட்டெடுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள பங்காண்மையூடாக இந்த அறிமுகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக Mezma டிரேடிங் லங்கா பிரைவட் லிமிட்டெட் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியறை 2018 மார்ச் இரண்டாம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன், இல. 362, நாவல வீதி, ராஜகிரிய எனும் முகவரியில் அமைந்துள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தோர்ஸ்டன் பீஸ் - Villeroy & Boch விற்பனை பணிப்பாளர் (ஆபிரிக்கா, இந்தியா, மத்திய கிழக்கு, தென் கிழக்காசியா) கலந்து கொண்டிருந்தார்.
Mezma டிரேடிங் லங்கா பிரைவட் லிமிட்டெடின் கண்கவர் மற்றும் புதிய Villeroy & Boch காட்சியறை, வர்த்தக நாமத்தின் பெறுமதிகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், கண்கவர் தன்மை, பரிபூரணத்தன்மை, ஒப்பற்ற இரசனையை விஜயம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
Villeroy & Boch இன் பரந்தளவு மற்றும் கவர்ச்சிகரமான குளியலறைத் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளதுடன், தமது வீடுகளை அலங்கரித்துக் கொள்ள சிறந்த அலங்காரங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு உகந்ததாகவும் அமையும் என Mezma டிரேடிங் லங்கா கம்பனி எதிர்பார்க்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
5 hours ago