2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

A5 வீதி புனரமைக்க 140 மில்லியன் அமெ.டொலர்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை முதல் செங்கலடி வரையிலா 151.3 கிலோமீற்றர் நீளமான A5 வீதியை 140 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
 
இந்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான உதவித் தொகையை ஒபெக் அமைப்பின் சர்வதேச அபிவிருத்திக்கான நிதியத்திலிருந்தும், சவுதி அபிவிருத்திக்கான நிதியத்திலிருந்தும் எஞ்சிய தொகை இலங்கை அரசாங்கத்தின் மூலமும் பங்களிப்பு செய்யப்படவுள்ளது.
 
பேராதனை – பதுளை – செங்கலடி வரையிலான இந்த வீதி 2002 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இலங்கையின் மத்திய மாகாணத்துக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X