
இந்தியாவின் முன்னணி கையடக்க தொலைபேசி உற்பத்தி நிறுவனமான மைக்ரோமெக்ஸ் நிறுவனம் அதன் கேன்வாஸ் தொடரில் 3G அண்ட்ரொயிட் தொழில்நுட்பத்தில் அமைந்த புதிய 4.5 அங்குல A74 Canvas Fun மற்றும் 5 அங்குல A76 Canvas Fun ஸ்மார்ட்ஃபோன் வகைகளை அறிமுகம் செய்துள்ளது.


இவ்விரு ஸ்மார்ட்ஃபோன்களிலும் முன் ஏற்றப்பட்ட ஆப்ளிகேஷன்கள், Tiled Notification மற்றும் முழுமையான திரை தெளிவுத்திறனுக்கு மேலதிகமாக சிறந்த பயனர் இடைமுகம் வசதிகள் காணப்படுகின்றன. அண்ட்ரொயிட் 4.2.2 ஜெல்லி பீன் சிஸ்டத்தில் இயங்குவதனால் பாவனையாளர்கள் தாம் விரும்பிய Google Play பயன்பாடுகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
5 மெகாபிக்செல் பின்கமரா மற்றும் 0.3 மெகாபிக்செல் முன்கமரா மூலம் வீடியோ அழைப்பு மற்றும் Chat களை மேற்கொள்ள முடிவதுடன், பாவனையாளர்கள் தமது மகிழ்ச்சியான தருணங்களை உச்ச தெளிவுடன் படம் பிடித்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் எந்நேரத்திலும் கோப்புக்களை பகிர்ந்துகொள்ளக் கூடிய வகையில் Bluetooth 2.0, Wi-Fi, USB 2.0 மற்றும் GSP ஆகியன நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இவ்விரு கைத்தொலைபேசிகளின் உள்ளக மெமரியை 32 GB வரை விஸ்தரித்துக்கொள்ள முடியும். A74 மற்றும் A76 இலுள்ள 1.3 GHz மற்றும் 1.3 GHz dual core processor சிப் இனை கொண்டுள்ளதனால் அதிவேகமான கேமிங் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். A74 ஆனது 1500 mAh மற்றும் A76 ஆனது 2000 mAh பேட்டரி செயற்திறனை கொண்டுள்ளது. தமது வடிவமைப்புக்களின் தரத்தை அதிகரிக்கும் வகையில், Mystic Blue, Raging Red மற்றும் Midnight Black போன்ற 3 வர்ணத்தெரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து மைக்ரோமெக்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் சன்ஜீவ் ஆரியரட்னம் கருத்து தெரிவிக்கையில், 'A74 மற்றும் A76 ஆகியவை நவீன, கவர்ச்சிகரமான வடிவமைப்பு சிறப்பான அம்சங்களுடனும், போட்டித்தன்மையான விலைகளில் கிடைக்கிறது. இந்த அறிமுகத்தின் ஊடாக இலங்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதும், தரமானதுமான ஸ்மார்ட்ஃபோன்களுக்கான கேள்வியை பயன்படுத்த எண்ணியுள்ளோம்' என்றார்.
மைக்ரோமெக்ஸ் A74 கேன்வாஸ் ஃபன் மற்றும் A76 கேன்வாஸ் ஃபன் ஆகியன தற்போது மைக்ரோமெக்ஸ் தலைமை அலுவலகம், மெஜெஸ்டிக் சிட்டி காட்சியறை மற்றும் நாடுபூராகவும் உள்ள அபான்ஸ் விற்பனை காட்சியறைகளில் கொள்வனவு செய்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு http://www.micromaxmobile.lk எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசியுங்கள்.