.jpg)
சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம், அண்மையில் BMICH இல் இடம்பெற்ற SLIM வர்த்தகநாம சிறப்பு விருது விழா 2014இல் வெண்கல விருதினை தனதாக்கிக் கொண்டது.
வங்கியியல், காப்புறுதி, தொலைத் தொடர்பாடல் மற்றும் ஏனைய சேவை துறைகளில் உள்ள செயற்திறன் மிக்க சேவை வர்த்தகநாமங்களை அடையாளப்படுத்தும் 'ஆண்டிற்கான சிறந்த சேவை வர்த்தகநாமம்' பிரிவில் போட்டியிட்டு CDB நிறுவனம் இவ் விருதினை வென்றெடுத்தது.
'வருடத்திற்கான சிறந்த சேவை வர்த்தகநாமம் பிரிவில் விருதை வென்றமையை விட தரமான சேவை நோக்கிய எமது பங்களிப்புக்கான உயரிய ஒப்புதலாக அமைந்துள்ளது' என சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கார்த்திக் இளங்கோவன் தெரிவித்தார்.
'உள்நாட்டு சேவை வர்த்தகநாமம் எனும் வகையில் எமது அந்தஸ்துக்கான அங்கீகாரமாக இந்த விருது கிடைத்தமை பெருமைக்குரிய விடயமாகும். இந்த வகையில் ஊனுடீ அங்கீகரிக்கப்பட்டமையானது எமது வாடிக்கையாளருக்கு சிறப்பானதை வழங்குவதற்கான செயல்முறைகளை புதுப்பிக்கும் எமது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எமது வர்த்தகநாமத்தை கட்டியெழுப்புவதற்காக நிறுவனத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பல மணிநேரம் கடினமாக உழைத்தோம். இந்த விருதானது ஊனுடீ அணியினரின் உந்துசக்திக்கு கிடைத்த ஒப்புதலாகவும், வர்த்தகநாமத்தை முன்னோக்கி கொண்டு செல்ல உதவுவதாகவும் அமையும்' என மேலும் அவர் தெரிவித்தார்.
போட்டிமிக்க சேவை பிரிவில் நிறுவனம் வெண்கல விருதை வென்றமையானது நிதி சேவைகள் துறை மற்றும் ஏனைய துறைகளிலும் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமாக மாத்திரமன்றி உள்நாட்டு வர்த்தகநாமமாகவும் ஊனுடீ ஐ வேறுபடுத்திக் காட்டுகிறது.
'அனைத்து சேவை துறைகளிலும் உள்ள வர்த்தகநாமங்களுக்கு எதிராக போட்டியிடும் திறனுக்கு கிடைத்த அத்தாட்சியாக இவ்விருது அமைந்துள்ளது. சந்தை புத்துருவாக்கம் மற்றும் செயல்முறை நோக்கிய எமது வர்த்தகநாமத்தின் மூலோபாய கவனம் மற்றும் உடன்பாடு ஆகியன எமது போட்டியாளர்களை வெற்றிக்கொள்ள வழிவகுத்துள்ளது. தொடர்ந்து நாம் புத்துருவாக்கம் தொடர்பில் சேவையாற்றி வருவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பெறுமதியை சேர்த்து வருகின்றோம்' என மேலும் இளங்கோவன் தெரிவித்தார்.
தொடர்ந்து 13 ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்டு வரும் SLIM வர்த்தகநாம சிறப்பு விருது விழாவில் மிகச்சிறந்த உள்நாட்டு வர்த்தகநாமங்கள் அடையாளப்படுத்தப்படுவதுடன், இந்த விருதுகள் சிறந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளை மதிப்பீடு செய்வதற்கான தொழிற்துறை அளவுகோலாக மாற்றமடைந்துள்ளது. இந்த விருதுகள் மூலம் வலிமையான வர்த்தகநாமங்களை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பு வழங்கப்படுவதுடன், வணிக செயல்திறனை மேம்படுத்தவும், தரமான வர்த்தகநாம மேலாண்மையை விருத்தி செய்வதற்கும் உதவியாக அமைந்துள்ளது.
நாட்டின் பட்டியியலிடப்பட்ட மிகச்சிறந்த வங்கியல்லாத நிதிசார் நிறுவனங்களில் (NBFIs) ஒன்றாக விளங்கும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் அதன் கிளை வலையமைப்பை நாடு முழுவதும் 59 ஆக விஸ்தரித்துள்ளது.