• முழு ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் சிறந்த உள்ளக ஆண்டறிக்கையாக தெரிவு
• உலகளவில் சிறந்த 100 ஆண்டறிக்கைகளினுள் CDB இற்கு 42ஆவது இடம்
• ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த 80 ஆண்டறிக்கைகளுள் 17ஆவது இடமாக தெரிவு
சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது, உலகின் மிகப்பெரிய வருடாந்த அறிக்கை போட்டியாக திகழும் League of American Communications Professionals (LACP) விருதுகள் வழங்கும் நிகழ்வில் பிளாட்டினம் விருதினை வென்றுள்ளது.
CDB நிறுவனமானது பன்முக நிதிச்சேவைகள் பிரிவில், சீரான உயர் திறமையை உறுதி செய்து சுமார் 24 நாடுகள் மற்றும் 1000 நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இவ் விருதினை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இந் நிறுவனமானது முழு ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் மிகச்சிறந்த உள்ளக ஆண்டறிக்கையை தயாரித்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டது. மேலும் உலகளவில் சிறந்த 100 ஆண்டறிக்கைகளுள் 42ஆவது இடத்தினையும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த 80 ஆண்டறிக்கைகளுள் 17ஆவது இடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உரையாற்றிய AGM/ பொது முகாமையாளர் அசித்த தசநாயக்க, 'எமது ஆண்டறிக்கையானது வெற்றிக்கான எமது நோக்கத்தை கோடிட்டுக்காட்டுகின்றது. உலகளாவிய மட்டத்தில் இத்தகைய அங்கீகாரத்தை பெற்றமையானது நோக்கம் மீதான எமது உறுதியை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. Vision விருது விழா 2012 இல் வெள்ளி விருது உள்ளடங்கலாக, இதற்கு முந்தைய நிகழ்வுகளில் நாம் பல்வேறு விருதுகள் மற்றும் கௌரவிப்புகளை பெற்றுள்ளோம். அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை புதுப்பித்து தொடர்ந்து பேணவுள்ளோம்' என்றார்.
பிளாட்டினம் விருதினை வென்றமையானது CDB ஆண்டறிக்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் உயர்தரம் ஆகியவற்றை சான்று பகர்வதாக அமைந்துள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.
League of American Communications Professionals (LACP) ஆனது, தொழிற்துறையில் சிறந்த வர்த்தக நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய பொது தொடர்புகள் துறையினுள் மன்றம் ஒன்றை உருவாக்கவும், முன்மாதிரியான தொடர்பாடல் திறன்களை வெளிப்படுத்துவபர்களை கௌரவிக்கும் நோக்கிலும் கடந்த 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் பட்டியியலிடப்பட்ட மிகச்சிறந்த வங்கியல்லாத நிதிசார் நிறுவனங்களில் (NBFIs), சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமும் ஒன்றாகும். நாடுமுழுவதும் 59 கிளைகளுடன் விரிவான வலையமைப்பை கொண்டுள்ள CDB ஆனது, நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய மூலோபாயங்கள் மற்றும் சரியான முறைமைகளை முன்னெடுத்து வருகின்றது.