
கொழும்பில் நவம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள CHOGM மாநாட்டுடன் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலா, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வியாபார நடவடிக்கைகள் தொடர்பான கண்காட்சி நிகழ்வில் 100இற்கும் அதிகமான சுற்றுலா பயண ஒழுங்குபடுத்துநர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி நிகழ்வானது பத்தரமுல்ல பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக நவம்பர் 14, 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் திறந்திருக்கும்.
பிரித்தானியா, சீனா, ரஷ்யா, உக்ரேன், பெலாரஸ், கசகஸ்தான், பாகிஸ்தான், ஜேர்மனி, பிரான்ஸ், மத்திய கிழக்கு, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பயண ஒழுங்குபடுத்துநர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றுவது தொடர்பாக தமது உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலா ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேபற்கவுள்ளனர்.
சுற்றுலாத்துறையை சேர்ந்த 82 பங்குபற்றுநர்கள் இந்த கண்காட்சியில் பங்குபற்றவுள்ளதுடன், 100இற்கும் அதிகமான காட்சிகூடங்களை கொண்டதாக இந்த கண்காட்சி அமைந்திருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.