2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

eChannelling இடமிருந்து eMindCare அறிமுகம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 24 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னோடியான டிஜிட்டல் சுகாதாரப் பரமாரிப்புத் தீர்வுகள் வழங்குனரான eChannelling, உளநலனைப் பேணுவதற்கான முதலாவது பரிபூரண டிஜிட்டல் கட்டமைப்பான ‘eMindCare’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் சமூக-உளவியல் சவால்கள் மற்றும் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், eMindCare தொழில்முறை கவனிப்புடன் பரந்த நடைமுறைகள் மற்றும் மனநலக் கல்வி ஆகியவற்றை இணைப்பதன் மூலம் ஒரு முக்கியமான இடைவெளி நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்தத் தளம், மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர், மற்றும் அதிக அழுத்தமுள்ள தொழில்களில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட தனிநபர்கள், குடும்பங்கள், மற்றும் குழுக்களின் பல்வகைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமது தற்போதைய மன நலத்தைப் பேணிக்காக்க ஆர்வமுள்ள தனிநபர்களுக்கும் இது உதவும்.

eMindCare-இன் அறிமுகத்தின் மூலம், eChannelling, இன்று நிலவும் மிகவும் அழுத்தமான சமூக-உளவியல் சவால்கள் சிலவற்றைத் தீர்த்து வைப்பதன் மூலம், சமூகத்தின் மீதான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தளம் சிகிச்சையைக் கடந்து, வலுவூட்டல், விழிப்புணர்வு மற்றும் மன நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. eMindCare-இன் அறிமுகமானது, நாடு முழுவதும் சுகாதார வசதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் சமூக-உளவியல் ஆதரவை வழங்குவதற்கும் உறுதிபூண்ட ஒரு பொறுப்பான டிஜிட்டல் சுகாதாரத் தலைவராக eChannelling-இன் பங்கை வெளிப்படுத்துகிறது.

இந்தத் தளம் மனநல மருத்துவவியல், ஆலோசனை, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குத் தனிநபர்களை இணைப்பதுடன், மேம்படுத்தப்பட்ட மன ஆரோக்கியத்தை வளர்ப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் கருவிகளை மக்களுக்கு வழங்குவதற்கான கல்வி வளங்களையும் வழங்குகிறது.

eMindCare பாவனையாளர்களுக்கு, தமது மன ஆரோக்கியப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நிபுணர் வழிகாட்டுதலை உறுதிசெய்யும் வகையில், தகுதிவாய்ந்த மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், மற்றும் நல்வாழ்வுப் பயிற்சியாளர்களுக்கான நேரடி அணுகலை வழங்குகிறது. இந்தத் தளம், ஆலோசனை, யோகா மற்றும் தியானத்தின் மூலம் மனம், உடல், மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை ஒருங்கிணைப்பதன் மூலம், மன நலத்திற்கு ஒரு முழுமையான அணுகுமுறையை மேற்கொள்கிறது. இது ஒரு நன்கு சீரான ஆதரவு அமைப்பை உருவாக்குகிறது.

மேலும், களங்கத்தைக் குறைப்பதற்கும், மனநலக் கல்வியறிவை மேம்படுத்துவதற்கும், தனிநபர்கள் தமது ஒட்டுமொத்த நல்வாழ்வை சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் நிர்வகிக்கவும் வலுவூட்டும் வகையிலான மதிப்புமிக்க கல்வி வளங்களையும் இது வழங்குகிறது. வசதி மற்றும் தனியுரிமைக்காக வடிவமைக்கப்பட்ட eMindCare, இணையத்தளம் மற்றும் மொபைல் செயலி ஆகிய இரண்டின் மூலமும் எந்த நேரத்திலும் எங்கும் அணுகக்கூடியது. இதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய மனநலம் மற்றும் நல்வாழ்வு எல்லோரின் அடையக்கூடிய வரம்புக்குள் வைக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X