2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Gunner Super Cross 2014’ பந்தய நிகழ்வுடன் பங்காளியாக கைகோர்க்கும் கொமர்ஷல் கிரெடிட்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது Gunner Super Cross 2014 நிகழ்வுடன் விஷேட அனுசரணையாளராக கைகோர்க்கும் தனது பங்காளித்துவம் தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. 
 
இலங்கை வாகன விளையாட்டுச்சார் சாரதிகள் சங்கத்துடன் (SLABA) ஒன்றிணைந்து இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் Gunner Super Cross 2014, மின்னேரியாவிலுள்ள பீரங்கி கட்டிடத் தொகுதியில் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெறும். 100 இற்கும் அதிகமான போட்டியாளர்கள் வாகனப் பந்தயத்தில் தாம் கொண்டுள்ள அதீத வீரத்தை இதன்போது வெளிக்காட்டுவார்கள். 
 
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. ரொஷான் எகொடகே கூறுகையில், 'இந்த நிகழ்வுக்காக இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுடன் கைகோர்ப்பதையிட்டு எமது நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. மெய் சிலிர்க்க வைக்கும் விறுவிறுப்பான மோட்டார் வாகன விளையாட்டுக்கள் எப்போதும் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியவையாக காணப்படுகின்றன. Gunner Super Cross 2014 நிகழ்வும்  அதற்கு விதிவிலக்காக இருக்காது. அத்துடன் இலங்கையின் வாகன விளையாட்டு தொடர்பான இவ்வருட நாட்காட்டியில் மிகவும் கவர்ச்சிகரமான ஒரு நிகழ்வாக அமைவதற்கான வாக்குறுதியையும் அது அளிக்கின்றது' என்றார். 
 
பீரங்கிப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்பொத வலியுறுத்திக் கூறுகையில், 'சேவையாற்றிக் கொண்டிருக்கும் படையினருக்கும், அதியுயர்ந்த தியாகத்தை மேற்கொண்ட வீரர்கள் உள்ளிட்ட உயிரிழந்த படை வீரர்களில் தங்கி வாழ்வோருக்காகவும் எண்ணற்ற நலன்புரி வசதிகளை ஏற்படுத்தவும், அதேபோல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மிகவும் தேவையாகவுள்ள நிதியை திரட்டிக்கொள்வதே இந்த செயற்றிட்டத்தின் அடிப்படை இலக்காகும். பீரங்கிப் படைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமூக நலன்புரி செயற்றிட்டங்களின் மூலமும் தமன்கட்டுவ பிரதேசத்திற்கு அருகில் வாழும் மக்கள் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வார்கள்' என்றார். 
 
இம் மாபெரும் பந்தய நிகழ்ச்சி 2004ஆம் ஆண்டு பீரங்கிப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் எஸ்.டி. தென்னகோன் RSP அவர்களின் மேற்பார்வையின் கீழ் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. பொலன்னறுவை இராச்சியத்தில் இடம்பெறுமென மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த Gunner Super Cross 2014 பந்தய நிகழ்வில் (இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் ஆகிய இரு வகைகளிலும்) நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் பங்குபற்றுவதை காணக்கூடியதாக இருக்கும். இவ்வாகனங்கள் அனைத்தும் விஷேடமாக கிறவல் இடப்பட்டு அமைக்கப்பட்ட பந்தயப் பாதையில் உரசும் ஓசையுடன் செல்வதனால் பார்வையாளர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான பந்தயச் சூழலை அது வழங்கும்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X