2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'Kelani Knowledge Forum - 2014'

A.P.Mathan   / 2014 மார்ச் 27 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை விநியோகிப்பதில் முதல் தர வர்த்தக நாமமாக திகழும் களனி கேபிள்ஸ் பிஎல்சி, தனது வருடாந்த அறிவுசார் விருத்தி நிகழ்வான 'Kelani Knowledge Forum - 2014' இனை அண்மையில் முன்னெடுத்திருந்தது. பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் தொனிப்பொருளாக 'The unseen side of the Quality' ஆக அமைந்திருந்தது.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் வசந்த மீவத்தன இந்த நிகழ்வின் பிரதான சொற்பொழிவை வழங்கியிருந்தார். தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் துறைசார்ந்த வல்லுநர்கள், கம்பனிகளின் உரிமையாளர்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

உலகில் பின்பற்றப்படும் நவீன வழிமுறைகள் பற்றிய விளக்கங்கள் இந்த செயலமர்வில் பகிரப்பட்டிருந்தன. இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் துறைசார்ந்தவர்கள் மத்தியில் அறிவை கட்டியெழுப்பும் வகையிலும், நவீன வழிமுறைகள் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பாடுகளை களனி கேபிள்ஸ் முன்னெடுத்து வருகிறது.

250க்கும் அதிகமான உள்நாட்டு பொறியியலாளர்கள், திட்ட முகாமையாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் பொது முகாமையாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் இந்த ஆண்டு பங்கேற்றிருந்தனர். இந்த செயலமர்வின் போது 'qualitative activities and the quality levels expected by present customer' எனும் தலைப்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், 'களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சமூக பொறுப்புணர்வு வாய்ந்த திட்டங்களில் ஒன்றாக Kelani Knowledge Forum அமைந்துள்ளது. நிர்மாணத்துறை சார்ந்த வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்து துறைசார்ந்தவர்கள் மத்தியிலும் நவீன நுட்பங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்படுகிறது' என்றார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'களனி கேபிள்ஸ் என்பது, உள்நாட்டு பொறியியல் மற்றும் நிர்மாணத் துறையில் முன்னணி வர்த்தக நாமமாக உயர்ந்துள்ளது. எனவே, நவீன நுட்ப முறைகள் பற்றி இந்த துறையை சேர்ந்தவர்களுக்கு விளக்கங்களை வழங்குவது என்பது எமது பொறுப்பாக அமைந்துள்ளது. எனவே இந்த நிகழ்வை நாம் வருடாந்தம் ஏற்பாடு செய்கிறோம். முன்பு, நாம் துறைசார்ந்த முன்னோடிகளை இந்த செயலமர்வுக்கு அழைத்து அவர்களின் மூலம் அனுபவங்களை பகிர்ந்திருந்தோம். இந்த முறை, சற்று மாறாக, தரக்கட்டுப்பாடுகள் தொடர்பான நிபுணர் ஒருவரை அழைத்திருந்தோம். ஏனெனில் தற்கால கட்டத்தில் வாடிக்கையாளர்கள் தரமான சேவைகளையும் பொருட்களையும் எதிர்பார்க்கின்றனர். எனவே, துறைசார்ந்தவர்கள் தாம் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் வழங்கும் சேவைகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய தரம் பற்றி சிறந்த அறிவை கொண்டிருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்' என்றார்.

இலங்கையர்கள் தரமான பொருட்களை கொள்வனவு செய்து அனுபவிப்பதன் மூலமாக தரமான வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும். சமூகத்துக்கு பாதுகாப்பான சூழலை கட்டியெழுப்ப களனி கேபிள்ஸ் பிஎல்சி தன்னை அர்ப்பணித்துள்ளது. உள்நாட்டு பொறியியல் துறைக்கு அவசியமான நவீன நுட்ப முறைகள் பற்றிய அறிவை வழங்கும் வகையில் 'Kelani Knowledge Forum 2014' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களனி கேபிள்ஸ் பிஎல்சி என்பது நூறு வீதம் உள்நாட்டு கம்பனியாகும். தேசத்தின் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் தேவைகளை கடந்த நான்கு தசாப்த காலமாக நிவர்த்தி செய்து வருகிறது.

SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் - 2012 நிகழ்வில் களனி கேபிள்ஸ் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வர்த்தக நாமம் எனும் வெண்கல விருதை பெற்றுக் கொண்டது. SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் - 2012 நிகழ்வில் கம்பனி இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது.

தரத்துக்கான ISO 9000:2008 சான்றை களனி கேபிள்ஸ் பெற்றுள்ளதுடன், சிறந்த சூழல் பராமரிப்புக்கான ISO 14001:2004 ஐயும் கொண்டுள்ளது. Taiki Akimoto 5S விருதுகள் வழங்கலில் தங்க விருதையும் பெற்றுள்ளது. இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் துறையில் 'Super Brands' விருதையும் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் 2008 இல் பெற்றுள்ளது.

களனி கேபிள்ஸ் பிஎல்சி SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் - 2013 இல் தங்க விருதை பெற்றிருந்தது. கம்பனியின் மூலம் ஊழியர்களின் அபிவிருத்தி மற்றும் நலன்புரி செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .