2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'Kelani Tube Bulb'

A.P.Mathan   / 2014 ஜூலை 24 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் களனி கேபிள்ஸ் பிஎல்சி சந்தையின் முன்னணி வர்த்தக நாமமாக திகழ்கிறது. 
 
தற்போதைய காலகட்டத்தில் களனி கேபிள்ஸ் இலத்திரனியல் குமிழ் வகைகளும் பிரபல்யமடைந்த வண்ணமுள்ளன. தனது தயாரிப்பு தெரிவுகளில் புதிய உள்ளம்சமாக 'Kelani Tube Bulb' ஐ அறிமுகம் செய்திருந்தது. இந்த தயாரிப்பை தற்போது நான்கு மற்றும் இரண்டு அடி அளவுகளில் பெற்றுக் கொள்ள முடியும். 
 
ஆகியவை உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிகளவு கேள்வி சந்தையில் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக சந்தையில் இந்த புதிய தயாரிப்பை அறிமுகம் செய்வதற்கு களனி கேபிள்ஸ் பிஎல்சி ஊக்குவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் சந்தையில் முழுமையான பாதுகாப்பான இலத்திரனியல் பொருட்களை அறிமுகம் செய்து, சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்ய களனி கேபிள்ஸ் திட்டமிட்டுள்ளது.
 
களனி கேபிள்ஸ் பிஎல்சி என்பது தனது பல ஆண்டு கால அனுபவத்தின் மூலம், பல்வேறு வகையான CFL குமிழ்களை 'Towards the light with secure means' எனும் தொனிப்பொருளில் அறிமுகம் செய்திருந்தது. களனி CFL குமிழ்கள் சிக்கனமான பாவனையை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இவை உதிரிப்பாகங்கள் முதல் மேம்படுத்தப்பட்ட ஆயுட்காலத்தை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளன. ஒன்றறை வருட உத்திரவாதத்தையும் இவை கொண்டுள்ளன. 
 
களனி CFL குமிழ்கள் உலகத்தரத்துக்கு அமைய அமைந்துள்ளன. இந்த தயாரிப்புக்கு நட்சத்திர சான்றிதழ் இலங்கை சுனித்யா வலு அதிகார சபையின் மூலம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பின் மூலம் இலங்கை தர நிறுவனத்தின் சான்று மேற்பார்வை செய்யப்படுவதுடன், சர்வதேச தரச் சான்றான ISO 9000:14000 என்பதும் வழங்கப்படுகிறது. இது சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 
 
களனி CFL குமிழ்கள் தெரிவு என்பது மின்வழங்கல் சுற்றில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது இலங்கையை பொறுத்தமட்டில் மிகவும் பொதுவான விடயமாக அமைந்துள்ளது. மேலும், இது CFL குமிழ்களை உற்பத்தி செய்யப்படுவதற்கான பாதுகாப்பான நவீன தொழில்நுட்ப முறையான 'Amalgam technology' கொண்டு தயாரிக்கப்படுகி;றது. எனவே இந்த தயாரிப்பு பாதுகாப்பு என்பது பாவனையாளர்களின் உடலை எவ்விதமான பாதரச கசிவினாலும் தாக்காது. 
 
'Tryphosper' மேற்பூச்சு என்பது CFL குமிழ்களிலிருந்து சாதாரணமாக வெளியேறும் infra-red கதிர்களை வெளியேறாமல் தடுக்கிறது. இந்த கதிர் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இது குமிழின் பிரகாசத் தன்மையை பாவனை காரணமாக குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. 
 
களனி CFL குமிழ் என்பது இந்த சகல உள்ளம்சங்களையும் கொண்ட ஒரே தயாரிப்பாக திகழ்வதுடன், உள்நாட்டு சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. பிளாஸ்ரிக் மேல் பகுதியுடன் விற்பனையாகும் இந்த தயாரிப்பு, கரையோரப்பகுதிகளை சேர்ந்த இல்லங்கள், ஹோட்டல்கள், தொழிற்துறைகள் போன்றவற்றுக்கு சிறந்த தெரிவாக அமைந்திருக்கும். 
 
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பொது முகாமையாளர் (விற்பனை) அனில் முனசிங்க, களனி Tube Bulb அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், 'குறுகிய காலப்பகுதியில் களனி CFL குமிழ்கள் சந்தையில் சிறந்த இடத்தை பெற்றுள்ளன. இந்த சாதனை என்பது, கம்பனியின் தெரிவில் சிறந்த உள்ளம்சத்தை கொண்டுள்ளதுடன், எம் அனைவருக்கும் சிறந்த ஊக்குவிப்பாகவும் அமைந்துள்ளது. களனி கேபிள்ஸ் என்பது தேசிய மின்வழங்கல் விநியோக கட்டமைப்புக்கு பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், இதற்காக பரிபூரணமான ஒளியேற்றல் தீர்வை கொண்டுள்ளது. இது தேசிய கட்டமைப்புக்கு பெறுமதி சேர்ப்பதாக அமைந்துள்ளது. எனவே, இலங்கையின் நுகர்வோர்கள் தற்போது பரிபூரணமான மற்றும் உத்தரவாதமளிக்கப்பட்ட இலத்திரனியல் சுற்றை சிக்கனமான முறையில் அனுபவிக்க முடியும். 
 
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 'களனி கேபிள்ஸ் CFL bulb தொடர்பில் கடந்த ஆறு மாத காலப்பகுதியினுள் எமக்கு எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. எமது தயாரிப்புகளின் சிறந்த உயர் தன்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எமது CFL தயாரிப்பு தெரிவுகளில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளில் அமைந்த தயாரிப்புகளை உள்ளடக்க எம்மை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது' என்றார்.
 
களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜெயசிங்க கருத்து வெளியிடுகையில், 'நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் களனி என்பது மிகவும் வரவேற்பை பெற்ற ஒரு வர்த்தக நாமமாக அமைந்துள்ளது. வலுச் சேமிக்கும் களனி CFL குமிழ்கள் மற்றும் ஏனைய தயாரிப்புகள் என்பது உள்நாட்டு விற்பனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளன. எனவே வாடிக்கையாளர்களும் எமது தயாரிப்புகளை எவ்வித ஐயமும் இன்றி கொள்வனவு செய்கின்றனர். இதன் காரணமாக எம்மால் குறிப்பிடத்தக்களவு சந்தை வாய்ப்பை எம்மிடம் கொண்டிருக்க முடிந்துள்ளது. மேலும், இந்த விற்பனையாளர்களினால், குறித்த காலப்பகுதிக்கு முன்னர் களனி CFL குமிழ்களின் விற்பனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவர்களின் காரணமாக எமது தயாரிப்பு தெரிவுகளில் புதிய பொருட்களை உள்வாங்குவதற்கு இவர்களின் ஊக்குவிப்பு எமக்கு கிடைத்திருந்தது' என்றார்.
 
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X