2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

Nature’s Secrets சந்தைப்படுத்தல் குழுவினரை வலுவூட்டுவதற்கு அதிநவீன தொழிநுட்பம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 08 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


2013.01.05ஆம் திகதியன்று, பசுமைக்கான தேசிய விருதினை பெற்ற இலங்கையின் முதல்தர அழகுசாதன வர்த்தக நாமமாக விளங்கும் Nature’s Secrets உற்பத்திகளை சந்தைப்படுத்தும் “நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ்” நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் குழுவினருக்கு தமது செயற்பாடுகளை திறமையுடன் முன்னெடுப்பதற்காக அதிநவீன தொழிநுட்ப வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கும் அதிகமானவர்களைக் கொண்ட தனது சந்தைப்படுத்தல் குவிற்கு அதிநவீன டெப் கணினிகளை விநியோகித்து, Nature’s Secrets சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை செயற்திறன் மிக்கதாக மாற்றுவதன் மூலம் பாவனையாவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தகவல் தொழிநுட்ப வசதியின் ஊடாக சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள், விற்பனைக்கான கட்டளைகளை பெற்றுக்கொண்ட உடனேயே விநியோக நிலையம் மற்றும் தலைமைக் காரியாலயம் ஆகியவற்றுடன் ஒன்லைனில் (Online) தொடர்புகொண்டு தெளிவுபடுத்த முடியும். இதன் காரணமாக விற்பனைக்கான கட்டளைகளை துரிதகதியில் நிவர்த்திசெய்ய முடியும் என்பதுடன், புதிய விற்பனைத் தகவல்களையும் தலைமைக் காரியாலயத்தின் ஊடாக நாளாந்தம் இற்றைப்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டெப் கணினி பயன்பாட்டினால் விற்பனைக்கான கட்டளைகளை பெற்றுக்கொள்ளும் செயற்பாடானது, காகித பயன்பாடின்றி (Paper less) இடம்பெறுவதால், அது சூழல் பாதுகாப்பிற்கும் இன்றியமைதா ஒன்றாக திகழ்கின்றது. விற்பனைக்கான கட்டகளைகளை பெறும் இந்த தன்னியக்க கணினி தொடர்பாடல் கட்டமைப்புக்கான மென்பொருள் Ceylon Linux நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. Ceylon Linux நிறுவனம் பல்வேறு வர்த்தக தேவைகளுக்காக தகவல் தொழிநுட்ப சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டெப் கணினிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன ஹொரண மில்லேவயில் அமைந்துள்ள நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவன வளாகத்தில் வைத்து அண்மையில் சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் இருந்து உருவாகக்கூடிய சர்வதேச அழகுசாதன வர்த்தக நாமமாக Nature’s Secrets ஐ மாற்றுவதற்கான இலக்குடன் தனது நிறுவனம் செயற்பட்டு வருவதாக நிறுவனத்தின் தவைரும், முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்க இங்கு கருத்து தெரிவித்தார். மிகவும் உயர்தர மற்றும் சுகாதார பராமரிப்புடன் கூடிய பாரம்பரிய தொழிநுட்ப வசதிகளுடனான தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற Nature’s Secrets அழகுசாதன பொருட்கள், சர்வதேச தரத்துடன் கூடிய ISO மற்றும் GMP அங்கீகாரங்களை கொண்டுள்ளது என்பதுடன், சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை மேலும் செயற்திறனாக மாற்றுவதற்காக சந்தைப்படுத்தல் குழாத்தினருக்கு நவீன தொழிநுட்ப வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக குமாரசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .