
இலங்கையின் முதல் தர நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்களை வர்த்தக நாமத்தின் கீழ் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனமான ‘National PVC’ தனது நீர் குழாய்கள் உற்பத்தி செயற்பாடுகளுக்காக நவீன முறையான PE (Polyethylene) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முன்வந்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு அண்மையில் 18 கிலோமீற்றர் பகுதிக்கு நிறுவுவதற்கு அவசியமான நீர் PE குழாய்களின் முதல் தொகுதியை நிறுவனம் விநியோகித்திருந்தது.
PE நீர் குழாய்கள் மேலதிக நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக அமைந்துள்ளதுடன், அபிவிருத்தியடைந்த நாடுகளின் மூலமாக குடிநீர் விநியோகத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. எதிர்வரும் வருடங்களில் தனது தயாரிப்புகளில் மேலும் பல PE தயாரிப்புகளை உள்வாங்க சென்ரல் இன்டஸ்ரிஸ் திட்டமிட்டுள்ளது.
சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நியுடன் விக்ரமசூரிய கருத்து தெரிவிக்கையில், 'சென்ரல் இன்டஸ்ரீஸ் நிறுவனம் தொடர்ச்சியாக சர்வதேச தரங்களை பின்பற்றி வாடிக்கையாளர்கள் மத்தியில் தனது கீர்த்தி நாமத்தை பேணும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இலங்கையில் காணப்படும் முன்னணி நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் எனும் வகையில், சர்வதேச நிறுவனங்களுக்கு நிகராக உற்பத்திகளை பேண முயற்சி செய்து வருகிறோம். எனவே நாம் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற எப்போதும் பின்நிற்பதில்லை. தற்போதைய சூழலில், பல அபிவிருத்தியடைந்த நாடுகள் PE தொழில்நுட்பத்தின் அனுகூலங்களை பயன்படுத்தி குடிநீர் விநியோகத்துக்கான நீர் குழாய்களை உற்பத்தி செய்து வருகின்றன. எனவே நாமும் PE தொழில்நுட்பத்தை பய்னபடுத்தி நீர் குழாய்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளோம்' என்றார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு முதல் தொகுதி PE நீர் குழாய்களை விநியோகிக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். Pநு தொழில்நுட்பத்திலமைந்த மேலும் பல புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி என்பது, இலங்கையின் முன்னணி நிதிசார் கம்பனியான சென்ரல் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமாகும். இலங்கையின் சகல PVC குழாய்கள் உற்பத்தியாளர்கள் மத்தியிலும், சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி என்பது PVC குழாய்கள் தயாரிப்பு மற்றும் PVC உதிரிப்பாகங்களுக்கு வேறாக SLS 147 மற்றும் SLS 659 தரச்சான்றுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி என்பது solvent cement, gutters, electrical conduits, PE water-pipes, water proof metal tanks, septic tanks, garden water-pipes, national compact ball-valves, Krypton electrical switches, sockets மற்றும் உதிரிப்பாகங்களையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது.