
அழகிய தோற்றத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையிலான உள்ளாடைகளை அணிவதே ஒவ்வொரு பெண்ணினதும் விருப்பமாகும். இது எதிர்வரும் Runway Super Model 2014 போட்டியில் கலந்து கொள்ளவுள்ள இளம் திறமைசாலிகளுக்கு விதிவிலக்கல்ல.
இலங்கையில் பெண்களுக்கான உள்ளாடைகள் உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் Triumph, மெஜெஸ்டிக் சிட்டியில் அமைந்துள்ள அதன் காட்சியறைக்கு விஜயம் செய்த அழகிகளுக்கு உள்ளாடைகள் தொடர்பான நவீன போக்குகள் மற்றும் பேஷன்கள் தொடர்பான அனுபவத்தை வழங்கியிருந்தனர். Triumph நிறுவனமானது சர்வதேச தரத்திற்கமைய, உள்நாட்டு உடல் தோற்றத்திற்கு பொருத்தமான பெண்களுக்கான உள்ளாடைகளை உற்பத்தி செய்து வருகிறது. இதுவே Triumph இன் தனித்தன்மைக்கு காரணமாகும்.
Runway Super Model 2014 அலங்கார அணிவகுப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறவுள்ளதுடன், இப் போட்டியில் வெற்றி பெறும் இருவர் சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெறவுள்ளனர்.
மேலும் Miss Body Beautiful அணிவகுப்பிற்கு Triumph அனுசரணை வழங்கவுள்ளதுடன், பெண்களுக்கான நவீன உள்ளாடைகளை முயன்று பார்ப்பதற்கு மெஜெஸ்டிக் சிட்டி காட்சியறைக்கு விஜயம் செய்யுமாறு போட்டியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போட்டியாளர்களின் எதிர்காலத்திற்கு உதவிடக்கூடியதும், தங்களது தொழிற்துறையில் பயன்படக்கூடிய பெண்களுக்கான உள்ளாடைகள் தொடர்பான தகவல்களை அறிவூட்டும் வகையில் அவர்களிற்கு பரந்துபட்ட ஸ்டைலகள்; மற்றும் வடிவங்கள் காண்பிக்கப்பட்டன.
இந்த காட்சியறைக்கு விஜயம் செய்த போட்டியாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு Triumph ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அமல் பெர்னாண்டோ மூலம் பெண்களின் உள்ளாடைகள் கொண்ட பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
