SLIIT கல்வியகத்தின் இலத்திரனியல் பொறியியல் மற்றும் கணனி பொறியியல் பீடம் மற்றும் பொறியியல் பீடத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'RoboFest 2014' வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு பல விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததுடன் பாடசாலை மாணவர்களுக்கும், பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களுக்குமென இந்த போட்டி இடம்பெற்றிருந்தது.
அண்மையில் நிறைவடைந்த 'RoboFest 2014' போட்டியில் பாடசாலை மட்டத்தில் காலி, மஹிந்த கல்லூரியை சேர்ந்த அணி வெற்றியீட்டியிருந்தது. குருநாகல் மலியதேவ கல்லூரியின் இரு அணிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றிருந்தன. வெற்றியாளர்களுக்கு 50,000 ரூபா பரிசுத் தொகையும், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றவர்களுக்கு முறையே 25,000 ரூபா மற்றும் 10,000 ரூபா பரிசாக வழங்கப்பட்டிருந்தன. மேலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களும் வெற்றியீட்டியவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
பல்கலைக்கழகங்களுக்கான போட்டியில் SLIIT, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஜெனரல் சேர். ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் போன்றன முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்று, முறையே 65,000 ரூபா, 45,000 ரூபா மற்றும் 25,000 ரூபா ஆகிய பரிசுகளையும், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் பெற்றிருந்தனர்.
பிரதான அனுசரணையை பிரான்டிக்ஸ் வழங்கியிருந்ததுடன், ஸ்ரீலங்கா ரெலிகொம், DBG குழுமம், eMarketingEye (pvt) Ltd, Energynet Pvt. Ltd, வலிபல் பவர் எரத்ன பிஎல்சி, சம்பத் வங்கி மாலபே கிளை, OREL சொலூஷன்ஸ் பிரைவேற் லிமிடெட், டொயோடா லங்கா பிரைவேற் லிமிடெட் மற்றும் DMS எலக்ரோனிக்ஸ் பிரைவேற் லிமிடெட் போன்றன இந்த நிகழ்வின் அனுசரணையாளர்களாக இணைந்திருந்தன.
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.