2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாஸ்டர்ஸ் கற்கைகளை அறிமுகம் செய்யும் SLIIT

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி பட்டப்படிப்பு கற்கைகளை வழங்கும் கல்வியகமான SLIIT, பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சரக்கு மற்றும் விநியோக தொடர் முகாமைத்துவ மாஸ்ட்டர்ஸ் கற்கைகளை வழங்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் பொறியியல் ஆகிய பிரிவுகளில் கற்கைகளை வழங்கி வரும் நிலையில், இந்த புதிய கற்கை அறிமுகத்தின் மூலமாக மாணவர்களுக்கு சரக்கு மற்றும் விநியோக தொடர் முகாமைத்துவ துறையில் நிபுணத்துவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த புதிய கற்கை அறிமுகம் தொடர்பில் SLIIT இன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், 'உயர் கல்வி துறையில் முன்னோடியாக திகழும் SLIIT, எப்போதும் தொழிற்துறையில் அவசியமான கற்கைகளை வழங்கி வருகிறது. சரக்கு மற்றும் விநியோக தொடர் முகாமைத்துவ மாஸ்ட்டர்ஸ் கற்கையை தொடர்வதன் மூலம் மாணவர்களுக்கு தொழிற்துறையில் உயர் அனுபவத்தை வழங்குவதுடன், எம்மிடம் காணப்படும் உயர் மட்ட விரிவுரையாளர்களின் மூலமாக மாணவர்களுக்கு, சரக்கு கையாள்கை தொடர்பான அறிவை பெற்றுக் கொள்ளவும், ஆளுமையை விருத்தி செய்து கொள்ளவும் உதவியாக அமைந்திருப்பார்கள்' என்றார்.
    
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'சகல SHU கற்கைகளும் பகுத்தறிவு, தொழில்நுட்ப மற்றும் நடைமுறை அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
    
பொறியியல், தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம் அல்லது விஞ்ஞானம் மற்றும் உற்பத்தி, செயற்பாடுகள் மற்றும் விநியோக தொடர் நிர்வாக செயற்பாடுகளில் ஆகிய துறைகளில் கற்கைகளை தொடர்ந்த நிபுணர்களுக்கு இந்த புதிய கற்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமது தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்து கொள்ள முனைபவர்களுக்கும், செயற்பாட்டு நிர்வாக சரக்கு கையாள்கைகள் அல்லது விநியோக தொடர் நிர்வாக செயற்பாடுகளில் அனுபவம் பெற்றவர்களுக்கும் இந்த கற்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பு சரக்கு கையாள்கை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இதர சரக்கு கையாள்கை மற்றும் அண்மையில் தமது உயர் கல்வியை பூர்த்தி செய்தவர்கள் கூட இந்த கற்கையை தொடரலாம்.

SLIIT இன் தலைமை அதிகாரி பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'நாம் அறிமுகம் செய்துள்ள புதிய கற்கையானது, மாணவர்களுக்கு தரம் வாய்ந்த கற்கையை வழங்குவது எனும் எமது கொள்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. புத்தமைவான, சிந்தனை திறன் வாய்ந்த மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த குடிமக்களை உருவாக்குவது எமது நோக்கமாகும். இவர்களின் மூலம் எமது தேசத்தின் பொருளாதாரத்தில் பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், இந்த புதிய கற்கைநெறி, இலங்கையின் தொழிற்துறைக்கும், பொருளாதாரத்துக்கும் பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும்' என்றார்.

கல்வி, கணினி, பொறியியல் மற்றும் விஞ்ஞான பீடத்தில் உப பீடாதிபதி பேராசிரியர் டெரன்ஸ் பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'சுமார் 8 வருடங்களுக்கு முன்னர், பேராசிரியர் சமே சாட் மற்றும் நானும் இணைந்து கொள்கைகள், தகவல் தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதுவிதமான கற்கைநெறியொன்றை வடிவமைத்திருந்தோம். போக்குவரத்து மற்றும் சரக்கு கற்றைகளுக்கான கல்வியகத்தின் மூலம் இந்த கற்கைநெறி அனுமதிக்கப்பட்டிருந்தது. எமது பட்டதாரி மாணவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளனர். சிலர் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இது போன்றதொரு செயற்பாட்டின் மூலம், இலங்கையில் இந்த வகையான கற்கை நெறிக்கான தேவை காணப்படுவது உணர்த்தப்பட்டுள்ளது' என்றார்.
    
இந்த கற்கைநெறி SLIITஇன் BoC மேர்ச்சன்ட் கட்டடத்தில் அமைந்துள்ள மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும். விண்ணப்பங்களை இந்த நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.sliit.lk எனும் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு ganga.s@sliit.lk இணைப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பவும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X