2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Truecaller app இலங்கையில் அறிமுகம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 26 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மிகப்பெரிய கையடக்க தொலைபேசி சமூகத்தை சேர்ந்த நிறுவனமான Truecaller, இலங்கையில் தனது பிரசன்னம் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சந்தை எனும் வகையில், இலங்கையில் தனது பிரசன்னத்தை ஆரம்பித்துள்ளது. Truecaller என்பது சுவீடன் நாட்டு நிறுவனம் என்பதுடன், தற்போது 75 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை உலகம் முழுவதும் கொண்டுள்ளதுடன், வளர்ந்து வருகிறது. இலங்கையைச் சேர்ந்த மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவையை விஸ்தரிப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
 
Truecaller என்பது மொபைல் சூழலை பாவனையாளருக்கு விரும்பிய பிரகாரம் மிகவும் ஸ்மார்ட் ஆகிய வகையில் அமைந்துள்ளது. தமது கையடக்க தொலைபேசியில் காணப்படும் தொடர்புகளின் விபரங்களுக்கு அப்பால் தமது தொடர்பு நிரலை விருத்தி செய்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். தமது கையடக்க தொலைபேசியில் அழைப்பை மேற்கொள்பவரின் இலக்கம் பதிந்திராத நிலையில் கூட தெளிவான இனங்காணலை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் மேலும் பல மொழிகளில் Truecaller மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்ஃபோன் எனும் வகையில் iOS, Android, Windows Phone 8, BlackBerry (7 & 10), Symbian S60 மற்றும் 40 ஆகியவற்றில் இயங்கக்கூடியது.
 
Truecallerஇன் சடுதியான வளர்ச்சிக்கு, பங்களிப்பு வழங்கும் வகையில் spam அழைப்புகளை இல்லாமல் செய்வதுடன், உடனடியாக அழைப்பது யார் எனும் விபரங்களை அறிந்து கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. Truecaller தற்போது 28000க்கும் அதிகமான spam அழைப்புகளை தனது வலையமைப்பில் கொண்டுள்ளது. தரவிறக்கம் செய்யப்பட்டதும் இந்த இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகளை தடை செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த app மூலமாக 5 மில்லியனுக்கும் அதிகமான spam அழைப்புகள் நாளாந்தம் உலகளாவிய ரீதியில் இனங்காணப்படுகின்றன. Truecaller என்பது இலங்கையர்களின் பிரத்தியேக உதவியாளராக இயங்கக்கூடியது, யாரிடமிருந்து அழைப்பு வருகிறது எனும் விபரங்களை வழங்கக்கூடியது. இதன் மூலம் குறித்த அழைப்பை பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை பாவனையாளர் தீர்மானிக்க முடியும். 
 
Truecaller ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த பதில் தலைமை அதிகாரி காரி கிருஷ்ணமூர்த்தி வர்த்தக வளர்ச்சி மற்றும் பங்காண்மைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் Truecaller ஆப்ளிகேஷனை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்களுக்கு இந்த சேவையை வழங்க நாம் தீர்மானித்தோம்' என்றார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இதுவரையில், எமக்கு கிடைத்த ஒரு அழைப்பை எம்மால் பெற முடியாமல் போன சந்தர்ப்பங்களில், குறித்த இலக்கத்துக்கு மீள அழைப்பை மேற்கொண்டு அது எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாவனையாளர்கள் spam அழைப்புகளில் சிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஆனாலும், Truecaller அறிமுகத்தின் மூலம், இலங்கையைச் சேர்ந்த பாவனையாளர்களுக்கு சரியான அழைப்புகளை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். 2014 ஆம் ஆண்டு நிறைவில் 120 மில்லியன் பாவனையாளர்களை கொண்டிருப்பதை இலக்காக கொண்டுள்ளது' என்றார். 
 
இந்த புத்தாக்கம் வாய்ந்த ஆப்ளிகேஷனுக்கு 18.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செகோனியா கெப்பிட்டலிடமிருந்து இந்த ஆண்டின் முற்பகுதியில் முதலீடாக பெற்றிருந்தது.  செகோனியா கெப்பிட்டல் என்பது Apple, Cisco, Dropbox, Google, LinkedIn, Oracle, Yahoo, YouTube மற்றும் Zappos ஆகிய நிறுவனங்களின் ஆரம்ப முதலீட்டாளராக திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X