2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'VAGACYTE' ஐ அறிமுகம் செய்துள்ள MARKSS HLC

A.P.Mathan   / 2014 நவம்பர் 20 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி சுகாதார பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான MARKSS HLC பிரைவேற் லிமிடெட், தனது வர்த்தக பங்காளரான Ms. Panacea Biotec இந்தியா உடன் இணைந்து 'VAGACYTE' எனும் Valganciclovir 450mg USP மருந்து வகையை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில், இலங்கை சிறுநீரக மருத்துவர் கல்வியகம், 'Place of therapy in Solid Organ Transplant' எனும் தலைப்பில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ கல்வி திட்டத்தின் போது இந்த அறிமுகம் இடம்பெற்றிருந்தது.
 
இந்த நிகழ்வின் பேச்சாளராக இந்தியாவின் அவயவ மாற்றீட்டு சிகிச்சை சமூகத்தின் தலைவர் வைத்தியர். அசோக் கிரிப்லானி பங்கேற்றிருந்தார்.
 
இதன் போது சிறுநீரக மாற்றீட்டு சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர், நோயாளர்கள் மத்தியில் நோய்த்தடுப்பை பேணும் வகையில் Valganciclovir 450mg இனை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி விளக்கியிருந்தார். இதன் மூலம் குறித்த நோயாளர்கள் சிறந்த தரம் வாய்ந்த வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நிலை காணப்படும் என்றார். 
 
இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்த பெருமளவான சிறுநீரக சிகிச்சை நிபுணர்களின் கருத்தும், சிறுநீரக மாற்று சிகிச்சையை தொடர்ந்து, நோய்த்தடுப்பு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்த போதும், அதிகளவு விலை காணப்பட்டமை சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. 
 
MARKSS HLC (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் சார்பான பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், 'தாம் இந்த தயாரிப்பை அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும். சிறுநீரக நோயாளர்களுக்கு சிறுநீராக மாற்றீட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், வழங்கப்படும் வழமையான தொற்றுத்தடுப்பு சிகிச்சைக்கான கட்டணத்தை விட VAGACYTE இன் விலை 1/3  பங்காக அமைந்துள்ளது. M/s Panacea Biotec Ltd இன் தொடர்ச்சியான முயற்சியின் மூலமாக உயர் விலையிலிருந்து குறைந்த விலைக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது' எனக் குறிப்பிட்டார். 
 
இது நோயாளர்களுக்கு ஏற்படும் அதிகளவான செலவீனத்தை குறைக்கும் வகையில் அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X