2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜா-எலயில் செலான் வங்கியின் தானியங்கி காசோலை வைப்பு இயந்திரம்

Editorial   / 2020 ஜூலை 30 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, தனது 50 ஆவது தானியங்கி காசோலை வைப்பு இயந்திரத்தை (CDK) ஜா-எல கிளையில் நிறுவியுள்ளதன் மூலம், நாடு முழுவதும் உள்ள CDK இயந்திர வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கம், டிஜிட்டலுக்கான மாற்றத்துடன், வங்கியின் வாடிக்கையாளர் வசதிக்கான உறுதிப்பாட்டையும் பலப்படுத்துவதாக அமைகின்றது.   

இலங்கையின் முதல் தானியங்கி காசோலை வைப்பு இயந்திர வலையமைப்பை 2017இல் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்த செலான் வங்கி, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்குள் 50 இயந்திரங்கள் வரை விரிவாக்கி, மக்களுக்கு பரந்த தானியங்கிச் சேவைகளை வழங்கியது.   

வங்கியின் தானியங்கி CDK வலையமைப்பு, சில்லறை வியாபாரிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், நிறுவன வாடிக்கையாளர் ஆகியோருக்கு, செலான் வங்கி மற்றும் பிற வங்கிகளால் வழங்கப்பட்ட காசோலைகளை, வாரம் தோறும் எல்லா நேரத்திலும் வைப்புச் சீட்டுகளை நிரப்பும் சிரமமின்றி, வைப்புக்காகச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.

CDK இயந்திரங்கள் மும்மொழி ஆதரவையும் வழங்குவதுடன், அனைத்து வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகுவதை உறுதி செய்கிறது. மிக உயர்ந்த பாதுகாப்பு, வைப்பை உறுதிப்படுத்த, பரிவர்த்தனை முடிந்தவுடன் பரிவர்த்தனைக்கான அச்சிடப்பட்ட பற்றுச்சீட்டைப் பெறலாம்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .