Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில், பல்வேறு வகையான மின் செருகிகள் மற்றும் மின் குதைகுழிகள் (Plugs and Sockets) பயன்படுத்தப்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம், எதிர்கால இலங்கையில், சதுர வடிவிலான மின் செருகிகள் மற்றும் மின் குதைகுழிகளை மாத்திரம் பயன்படுத்துவதற்கான தரநிலையொன்று கொண்டுவரப்படவுள்ளது.
இவை, ஜீ ரக எம்பியர் 13இல் அமைந்த சதுர வடிவிலான கூர்களையும் துவாரங்களையும் கொண்டமைந்த செருகிகளாகவும் மின் குதைகுழிகளாகவும் காணப்படும்.
இலங்கையில் தற்போது, 60க்கும் அதிகமான வகைகளைக் கொண்ட மின் செருகிகளும் மின் குழதகுழிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில சமயங்களில், அந்த செருகிகளை இலங்கையில் பயன்படுத்தப்படும் மின் குதைகுழிகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலைகூட காணப்படுகின்றது.
இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மின் பாவனையாளர்களுக்கு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில்,
1. தரமற்ற அதிக மின் கொள்ளளவைக் கொண்ட மின் அடைப்பான்கள் (Multi Plugs)
2. தரமற்ற மின் தொகுப்பேடு (Extension Codes)
3. பாதுகாபற்ற முறையில், மின் குதைகுழிகளுக்குள் வயர்களைப் பொறுத்துதல்
4. மின் குழியில் காணப்படும் புவித்தொடுகைக்கு இடையூறு ஏற்படுத்தல்
போன்ற அபாயகரமான செயற்பாடுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், பல்வேறுபட்ட மின்சார விபத்துகள், தீப்பற்றல் மூலமாக ஏற்படும் சொத்து அழிவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை, மின் பாவனையாளர்களுக்கு ஏற்படுகின்றது.
இவ்வாறான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே, தரம் வாய்ந்த மின் செருகிகள் மற்றும் மின் குதைகுழிகள் போன்றவற்றை இலங்கைக்குள் அறிமுகப்படுத்த, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல், மின்னணு சாதனங்கள் மற்றும் உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் இறக்குமதி செய்தல் போன்ற நடவடிக்கைகளின் போது, 13 அம்பியரிலான சதுர வடிவம் கொண்ட செருகிகள் மற்றும் மின் குதைகுழிகளைத் தவிர்ந்த ஏனையவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு, அவற்றின் உற்பத்தி மற்றும் இறக்குமதிகளுக்கும் தடை விதிக்கப்படும்.
அதேபோன்று, எதிர்வரும் 2018அம் அண்டு ஓகஸ்ட் மாதம் முதல், இவ்வாறு தடை செய்யப்படும் செருகிகள் மற்றும் மின் குதைகுழிகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படும். (இது, அலைபேசிகளுக்கான மின்னேற்றிகளுக்கும் பொருந்தும்)
மின் தொகுப்பேடு உற்பத்தி மற்றும் இறக்குமதிகளின் போதும், 13 அம்பியர் ரக மின் குதைகுழிகளையே (பியூஸ் போன்றவை) உற்பத்தி அல்லது இறக்குமதி செய்யலாம். இவ்வாறில்லாத உற்பத்திகள் மற்றும் இறக்குமதிகளுக்கும், எதிர்வரும் 2018 ஓகஸ்ட் முதல் தடை விதிக்கப்படும்.
நீங்கள் தற்போது பயன்படுத்திவரும் 5A மின் செருகிகள் மற்றும் மின் குதைகுழிகளை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அவற்றை மாற்றவேண்டிய அவசியம் ஏற்படும் சந்தர்ப்பங்களின் போது, சந்தையில் விற்பனைக்கு உள்ள '6A Max' என்ற மின் குதைகுழிகளையே வாங்கிப் பயன்படுத்துமாறு, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின் பாவனையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
(5 அம்பியர் கொண்ட வட்ட வடிவிலான மின் குதைகுழியொன்றுக்கு, எந்தவொரு சந்தர்ப்பத்தின் பொதும், 13 அம்பியரிலான சதுர வடிவிலான செருகியைப் பயன்படுத்தக் கூடாது)







14 minute ago
20 minute ago
49 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
49 minute ago
51 minute ago