Editorial / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
e-விவசாய கட்டமைப்புகள் தொடர்பில், தற்போது முன்னெடுக்கப்படும் வழிமுறைகள் தொடர்பான புரிந்துணர்வை துறைசார் பங்காளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் TAMAPஇனால் e-விவசாயம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்பகுதிகள் பயிற்சிப்பட்டறை அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சி நிலையத்துடன் (HARTI) கைகோர்த்து தனியார் மற்றும் அரச துறைகளைச் சேர்ந்தவர்களுடன் இந்தப் பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்ப ட்டிருந்தது. விவசாயிகளுக்கு டிஜிட்டல் ரீதியில் பெற்றுக் கொடுக்கக்கூடிய தீர்வுகள் பற்றி இந்தக் கருத்தரங்கில் ஆராயப்பட்டிருந்தது. சந்தைகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதற்குப் பெற்றுக் கொடுக்கக்கூடிய புதிய விவசாய தொழில்நுட்ப அப்ளிகேஷன்கள் தொடர்பில் பங்குபற்றுநர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. தற்போதைய கொவிட்-19 இடர்நிலையானது, உடனுக்குடனான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், சமூகத் தூரப்படுத்தலை பேணுவதற்கும் e-விவசாய தீர்வுகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தியிருந்தது.
TAMAPஇன் செபாஸ்டியன் பல்செராக் Zoom ஊடாக இந்தப் பயிற்சிப்பட்டறையில் இணைந்து e-விவசாயம் என்றால் என்ன என்பது தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார். அத்துடன், e-விவசாயக் கட்டமைப்புகள் மற்றும் அப்ளிகேஷன்கள் தொடர்பான மேலோட்டத்தையும் பெற்றுக்கொடுத்தார். e-விவசாயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள், தற்போதைய பங்குபற்றுநர்கள், பாரியளவு மற்றும் சிறியளவு செயற்பாட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள், விற்பனையாளர்கள் இடையேயான ஈடுபாடுகள் போன்றன தொடர்பிலும், அவர் விளக்கமளித்திருந்தார்.
FAOஇன் டிஜிட்டல் விவசாய மூலோபாயம், இலங்கையில் e-விவசாயம் தொடர்பான திட்டம் மற்றும் வழிமுறை தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உணவு, விவசாய அமைப்பின் பிரதிநிதி கலாநிதி. Xuebing Sun உரையாற்றும் போது, “விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக FAOஇனால் பின்பற்றப்படும் பிரதான மூலோபாயமாக e-விவசாயம் அமைந்துள்ளது.
“வளர்ந்து வரும் டிஜிட்டல் சமூகத்துக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் உதவிகளை வழங்க FAO தன்னை அர்ப்பணித்துள்ளது. தேசிய நோக்கு மற்றும் ஒட்டுமொத்த தந்திரோபாய இலக்குகளுடன் பரிபூரண டிஜிட்டல் விவசாய வழிமுறை எனும் தேசிய வழிமுறை ஒன்றை ஏற்படுத்துவது இலக்காக அமைந்துள்ளது.
“தேசத்தின் டிஜிட்டல் விவசாய முன்னுரிமைகளை இனங்காணல், இடையீடுகள் தொடர்பான பகுதிகளை வரைவிலக்கணப்படுத்தல், பங்குதாரர்களின் பொறுப்பு மற்றும் அவசியமான வளங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதனூடாக இந்த இலக்கை எய்தக்கூடியதாக இருக்கும்” என்றார்.
10 minute ago
42 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
54 minute ago