2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

15 கிலோ பாரம் தாங்கும் அதிசய லில்லி

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிசய 'லில்லி' இனங்களில் பலவகை இருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரமாண்டமானது ‘விக்டோரியா அமசோனிகா’ என்னும் வகை லில்லியாகும். இந்த லில்லி இனத்தினுடைய இலை சுமார் 1.5 மீற்றர் விட்டமுடையது. அந்த இலைகளைப் பார்க்கும்போது பெரிய தாம்பூலம் போல் காட்சியளிக்கும். இந்த பிரமாண்டமான இலைகளில் சுமார் 15 கிலோகிராம் எடையுள்ள எந்தப் பொருளையும் வைக்கமுடியும்.

நெதர்லாந்திலுள்ள 'பிளிஜ்டோர்ப்' மிருகக்காட்சிசாலையில் இந்த லில்லி பூக்களுக்கும் அதிக கிராக்கி இருக்கிறது. இங்கு மலர்ந்துள்ள லில்லி பூக்கள் முதல்நாள் இரவில் வெள்ளை நிறமாக காட்சியளிக்கும். மறுநாள் இதன் நிறம் இளம் ஊதாவாக மாற்றமடைவது அதிசயிக்கத்தக்கது. இதனுடைய பூக்கள் சுமார் 14 சென்ரிமீற்றர் விட்டம் கொண்டவை. அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்கும் லில்லி இலைகளில் சிறு பிள்ளைகளை உட்கார வைத்து படம் எடுப்பதற்கும் அனுமதிக்கிறார்கள். இதனால் இந்த லில்லி இனங்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம்தான்.

 


  Comments - 0

  • பெருவை சாரதி Monday, 24 January 2011 12:22 PM

    மிக அற்புதமான மற்றும் அதிசயிக்கத்தக்க இறைவன் படைத்த எவ்வளவோ பொருட்களில் ஒன்றை உலகுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். இதுபோல் இன்னும் எதிர்பார்க்கிறேன். கருத்துப் பதிவு-பெருவை சாரதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .