2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

80 வயதை கொண்டாடிய பிரிட்டனின் மிக பழமையான மூவர்

Editorial   / 2017 மே 22 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனின் மிக  பழமையான மூன்று பெண்மணிகள், தமது 80ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடியுள்ளனர். 

ஒரே பிரசவத்தில் மூவராகப் பிறந்து, 80 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் பிரிட்டனைச் சேர்ந்த இந்த மூன்று பெண்மணிகள் நூறு வயதை தாண்டியும் வாழ வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் இவர்களை வாழ்த்தியுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த மேரி புலக்ஸுஹம், மார்கரட் கொலமன் மற்றும் ஜோர்னியா லீச் ஆகிய மூவரும்  1937 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி, மாபேல் புலக்ஸுஹம் என்பவருக்கு மகள்களான பிறந்துள்ளனர்.

ஒரு குழந்தையை மட்டுமே எதிர்பார்திருந்த மாபேல்  புலக்ஸுஹக்கு, பிரவச தினத்தன்று பாரிய அதர்ச்சி காத்திருந்தது. மருத்துவ தாதி ஒருவர், ஒரு குழந்தையை முதலில் எடுத்து செல்ல,  மேலும் இரு தாதிகள் அவரை  பின்தொடர்ந்துள்ளனர்.

முதலில் கொண்டுச் சென்ற குழந்தையை அரவணைத்த மாபேல், ஏனைய இரு தாதிகளும் கொடுத்த குழந்தைகளை பார்த்து அதிர்ந்துபோனார். பின்னரே, அவருக்கு மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைக் கேள்வியுற்ற அவர், மகிழ்வின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

தான் ஒரு குழந்தையையே எதிர்பார்திருந்ததாகவும் எனினும், இறைவனின் அருளால் தனக்கு மூன்று பிள்ளைகள் கிடைத்ததாகவும் அவர் அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, மேற்படி மூவரும் தமது 80ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளனர்.

பிரிட்டனில் வாழ்ந்துவரும் மிக பழைமையான மூவர் இவர்களென அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .