2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கசிப்பு விற்பனையால் கள்ளில் போதையில்லை

George   / 2017 ஜூன் 05 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கசிப்பு விற்பனையாளர்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, கிளிநொச்சி பனை - தென்னை வள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.   

கிளிநொச்சி பனை - தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்துக்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில், 30 கள் விற்பனை நிலையங்கள் அனுமதிப்பெற்று இயங்கிவருகின்றன.  

600 மேற்பட்ட தொழிலாளர்கள், தாம் உற்பத்தி செய்யும் கள்ளை, இந்த நிலையங்களுக்கு விற்பனை செய்து தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

தமது வாழ்வாதாரத்துக்கான வருமான வழியாக, இந்தத் தொழிலையே நம்பி  4000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.    

“40 அல்லது 50 அடி உயரமான மரங்களில் ஏறி, அபாயகரமான நிலையில் கள் இறக்கி தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில்,  கசிப்பு விற்பனையாளர்களால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், கிளிநொச்சி பனை -தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் கருத்து தெரிவித்தபோது, “கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துக் காணப்படும் கசிப்பு மற்றும் கஞ்சா விற்பனையால் பனை - தென்னை வள தொழிலாளர்கள்  பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். கள் விற்பனையில் வீழ்ச்சி நிலையும் ஏற்பட்டுள்ளது.

“எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுத்து கசிப்பு விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .