2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  

மன்னார் - தள்ளாடி 54ஆவது கட்டளைப் பணியகத் தலைமை அதிகாரி பிரிகேடியர் சுபாசன வெலிக்கல பணிப்புரைக்கமைய, மன்னாரில், வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கான கல்வி முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு கற்றல் உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள் என்பன படைத்தரப்பினரால் வழங்கி வைக்கப்பட்டன.  

இந்நிகழ்வு, 543ஆவது கட்டளைத் தலைமையக அதிகாரி கேணல் மங்கள மாயாதுன்ன ஏற்பாட்டில், மன்னார் - பேசாலை புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தின் அரங்க மண்டபத்தில், இன்று (06) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.  

இதன்போது, மன்னார் தீவுப்பகுதிகளில் உள்ள 10 பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 112 மாணவர்களுக்கு, பாடசாலைக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .