Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வெடிபொருள்கள் அபாயமென அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி, முகமாலை, அதனை அண்மித்த பகுதிகளில், கால்நடைகளை வைத்துப் பராமரிப்பதையும் பொதுமக்களின் நடமாட்டங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்துக்குட்பட்ட முகமாலை, அதனை அண்டிய பகுதிகள், வெடிபொருள்கள் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான பிரதேசங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டு, அப்பகுதிகளில் வெடிபொருள்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரதேசங்களில், தொடர்ச்சியாக வெடிபொருள்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வெடிபொருள்கள் அகற்றப்படாத பகுதிகளில், கால்நடைகளைப் பராமரித்தல், பொதுமக்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, வெடிபொருள் அகற்றப்படாத பிரதேசங்களுக்குள் பொதுமக்கள் நுழைந்து, சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்தப் பிரதேசங்களில் நடமாட்டங்களையும் கால்நடைகளை வைத்துப் பராமரிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு, கண்ணிவெடி அகற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025