2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சிகை அலங்காரிப்பாளர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் அங்கத்தவர்களில், தெரிவு செய்யப்பட்ட சுமார் 06 பேருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (24)   மன்னார் எமில் நகரிலுள்ள மன்னார் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

விசேட தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சங்க அங்கத்தவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளை, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அவருடைய வருடாந்த குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்கிவைத்தார்.

ஏற்கெனவே சங்கத்துக்கு விஜயம் செய்த போது, தாம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த துவிச்சக்கரவண்டிகளை தற்போது வழங்கப்படுவதாகவும் சங்க நிர்வாகம் ஏற்கெனவே  கோரியிருந்ததன் அடிப்படையில், சங்கத்தின் கட்டட தள வேலைகளை பூர்த்தி செய்வதற்கு, இந்த ஆண்டு தமது ஒதுக்கீட்டின் கீழ் 2  இலட்சத்து 50,000 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் எனவே தளத்துக்கான வேலைகளை விரைவில் முடிக்குமாறும், அத்தோடு எதிர்வரும் ஆண்டுகளில் தம்மால் முடிந்த சகல உதவிகளையும் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும், சங்க அங்கத்தவர்கள் ஒற்றுமையோடு செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .