Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
மன்னார் பிரதேச செயலகப் பகுதியின் சாந்திபுரம், இருதயபுரம், ஜீவபுரம் மற்றும் கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், தமது உதவித்திட்டத்தோடு, மன்னார் வாழ்வுதய பணிப்பாளரோடு கலந்துரையாடி, வாழ்வுதயம் ஊடாக, கரிட்டாஸ் இலங்கையின் உதவியைப் பெற்று மக்களுக்கு நிவாரணப்பொருட்களை, நேற்று திங்கட்கிழமை (23) வழங்கி வைத்தார்.
நிகழ்வின்போது மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை, மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளரும் தற்காலிக வாழ்வுதய இயக்குனருமான அருட்தந்தை முரளிதரன், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் பிரதேச செயலக கிராம அலுவலர்களின் நிர்வாக உத்தியோகத்தர் ராதா பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து சுமார் 850 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
11 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
1 hours ago