2021 ஜூன் 14, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படுமா?

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னாலுள்ள காணிகளில் இரண்டாம் கட்டமாக, 3 மாதத்தில்  விடுவிக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதுக்கமைய, காணிகள் நாளைய தினம் திகதி விடுவிக்கப்படுமா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

கடந்த ஜனவரி 31ஆம் திகதி, பிலவுக்குடியிருப்பில் மக்கள் நிலமீட்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். அதனை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால்,  பொன்னம்பலம் மருத்துவமனை அமைந்திருந்த காணி உள்ளிட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

போராட்டம் ஒரு மாதத்தை அண்மிக்கும் சந்தர்ப்பத்தில், இராணுவத்தால் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக காணி விடுவிப்பு தொடர்பில் கடிதமொன்று மக்களிடம் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், 7.75 ஏக்கர் காணி முதல் கட்டமாக விடுவிக்கப்படும் எனவும் மிகுதி 10 ஏக்கர் காணி, இரண்டாம் கட்டமாக 3 மாதத்தில் விடுவிக்கப்படும் எனவும்  மிகுதி காணி பொன்னம்பலம் மருத்துவமனை அமைந்திருந்த காணி, 6 மாதங்களில்  விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையும் நிலையில், தமது காணி விடுபடுமா என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .